Home /News /business /

உக்ரைன் போரால் ஏற்படும் பணவீக்கத்தை சமாளிக்க ஆசிய நாடுகள் தயாராகவேண்டும் - ஐ.எம்.எப்.

உக்ரைன் போரால் ஏற்படும் பணவீக்கத்தை சமாளிக்க ஆசிய நாடுகள் தயாராகவேண்டும் - ஐ.எம்.எப்.

IMF

IMF

உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும்  பணவீக்கத்தைத் தடுக்க சில ஆசிய மத்திய வங்கிகள் விரைவாக வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும், என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது .

மேலும் படிக்கவும் ...
உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும்  பணவீக்கத்தைத் தடுக்க சில ஆசிய மத்திய வங்கிகள் விரைவாக வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும், என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது .

ஆசியாவில் பணவீக்கம் மற்ற பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது "மிதமானதாக" இருந்தாலும், வரும் காலங்களில் அது பெரிய உயர்வை காணாமல் தவிர்க்க பல நாடுகளின் பொருளாதாரங்கள் விரைவாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது என்று IMF இன் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் ஒரு வலைப்பதிவில் எழுதியுள்ளார்..

வருமான வரி செலுத்த தாமதமானால் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் தெரியுமா?

"அதே நேரத்தில், கொரோனா தொற்றின் போது சில நாடுகள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் கணிசமான கடனைப் பெற்றது. அதன் வட்டி விகிதம் என்பது ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் அந்த நிறுவனம் / அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டங்களை அது மிகவும் பாதிக்கும்" என்று சீனிவாசன் கூறினார்.

2007-08 உலகளாவிய கடனில் ஆசியாவின் பங்கு 25 சதவிகிதமாக இருந்தது. கொரோனா வைரஸ் பொது சுகாதார அவசரநிலைக்குப் பிறகு நிதி நெருக்கடி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. எந்தெந்த நாட்டின் பொருளாதாரங்கள் விரைவாக வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை சீனிவாசன் குறிப்பிடவில்லை.

தென் கொரியா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கடந்த மாதத்தில் பணவியல் கொள்கையை கடுமையாக்கியுள்ளன. ஏனெனில் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியச் செலவுகள் அதிகரித்து வருவதால், கடன் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலைகளுக்கு மத்திய வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. அதிக வட்டி இருந்தால் கடன் குறையும். பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படும். இதனால் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும்.

சீனாவில் சொத்துக்கள் மதிப்பு வீழ்ச்சி.. பாதி செல்வத்தை இழந்த ஆசியாவின் பணக்கார பெண்..!

கொள்கைப் பரிந்துரைகள் நாடு வாரியாக மாறுபடும் அதே வேளையில், அந்நியச் செலாவணி தலையீடுகள், மேக்ரோப்ரூடென்ஷியல் கொள்கைகள் மற்றும் மூலதனப் பாய்வு மேலாண்மை போன்ற நடவடிக்கைகள் முறையான இடர்களை நிர்வகிக்க அரசாங்கங்களுக்கு பயனுள்ள கருவிகளாக இருக்கும் என்று சீனிவாசன் கூறினார்.

"நாடுகள் மிகவும் தாமதபடுத்தாமல் விரைவாக வேலை செய்ய வேண்டும். தேவையான இடங்களில் தங்கள் கொள்கையை சரிசெய்ய அல்லது பொருத்தமான இடங்களில் தங்கள் வெளிப்புற நிதி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் " என்று அவர் கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு இந்தியா சுமார் 23 பில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளது. இதுவே இந்திய பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். பெரும்பாலான வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதாரங்களும் இதேபோல் மூலதன வெளியேற்றத்தை அனுபவித்து வருவதாக மூத்த IMF அதிகாரி குறிப்பிட்டார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: IMF, Inflation, Russia - Ukraine

அடுத்த செய்தி