ஏப்ரல் 1 முதல் எது விலை குறையும், எது விலை ஏறும்? Smart phone முதல் Fridge வரை..
ஏப்ரல் 1 முதல் எது விலை குறையும், எது விலை ஏறும்? Smart phone முதல் Fridge வரை..
tv smarphone
Budget 2022: மொபைல் போன் சார்ஜர்களுக்கான டிரான்ஸ்பார்மர் சார்ந்த சில பொருட்களுக்கான சுங்கவரி சலுகையை 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பட்ஜெட்டில் உள்ள பல அம்சங்கள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் சார்ந்த உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
மத்திய அரசு புதிதாக விதித்துள்ள, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான சுங்கவரி காரணமாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அந்த பொருட்கள் விலை உயர்ந்ததாக அல்லது விலை குறைவாக இருக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த அக்கவுண்டிங் நிறுவனமான கிராண்ட் தான்டான் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்ஃபோன், டிவி மற்றும் ஹெட்ஃபோன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் எந்ததெந்த பொருட்களுக்கு அதிகமாக அல்லது குறைவாக பணம் செலுத்த நேரிடும் என்பதை இந்தச் செய்தியில் காணலாம்
ஸ்மார்ட் ஃபோன்கள் விலை குறைய வாய்ப்பு
மொபைல் போன் சார்ஜர்களுக்கான டிரான்ஸ்பார்மர் சார்ந்த சில பொருட்களுக்கான சுங்கவரி சலுகையை 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. இதேபோன்ற சலுகை கேமரா லென்ஸ் மற்றும் இதர பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி செலவு குறைய உள்ளது. இதன் எதிரொலியாக, விலை குறைவு பலன்கள் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கலாம்.
ஸ்மார்ட் வாட்ச்சஸ் & பிட்னஸ் பேண்ட் விலை குறைய வாய்ப்பு
ஸ்மார்ட் வாட்ச்களுக்கு தேவைப்படும் சில பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு மார்ச் 31ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு வரையில் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக உற்பத்தியாளர்களுக்கான செலவினம் குறையும் என்ற சூழலில், வாடிக்கையாளர்களுக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
வயர்லெஸ் ஏர்பட்ஸ் விலை உயர வாய்ப்பு
வயர்லெஸ் ஏர்பட்ஸ் சார்ந்த பொருட்களின் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் உற்பத்தி செலவு அதிகரிக்க உள்ளது. ஆகவே, வயர்லெஸ் ஏர்பட்ஸ் மற்றும் நெக்பேண்ட் ஹெட்ஃபோன்ஸ் போன்றவற்றை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கூடுதலாக பணம் செலுத்த நேரிடலாம்.
பிரீமியம் ஹெட்ஃபோன்ஸ் விலை உயர வாய்ப்பு
ப்ரீமியம் வகை ஹெட்ஃபோன்களின் நேரடி இறக்குமதிக்கு 20 சதவீத சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக அதிகமான பணத்தை செலவு செய்ய நேரிடும்.
ஃபிரிட்ஜ் விலை உயர வாய்ப்பு
ஃப்ரிட்ஜின் கம்ப்ரஸரில் பயன்படுத்தப்படும் சில பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் ஃபிரிட்ஜ்களின் விலை உயரக்கூடும்.
விலை உயர்வு எப்போது அமலுக்கு வருகிறது
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. புதிய உற்பத்தி செலவுக்கு செலவுகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு எப்போது, எப்படி பலன்கள் வழங்கப்படுகிறது என்பதை பொறுத்து, நீங்கள் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு கூடுதலாக அல்லது குறைவாக பணம் செலுத்த நேரிடலாம்.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.