முகப்பு /செய்தி /வணிகம் / பணக்காரராக பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டுமா? இதோ ஸ்மார்ட்டான 5 வழிகள்!

பணக்காரராக பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டுமா? இதோ ஸ்மார்ட்டான 5 வழிகள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பணியிலிருந்து ஓய்வு பெறும்போது பணக்காரராக இருக்க வேண்டும் என்று பலர் கடினமாக உழைப்பார்கள். சிலர் வேகமாக ஓய்வு பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதில் நீங்களும் ஒருவரா. இதோ உங்களுக்கான ஸ்மார்ட்டான 5 வழிகள்.

திட்டமிடுதல்:

ஓய்வு பெற வேண்டும் என்றால் எவ்வளவு வேகமாக முதலீடுகளைச் செய்கிறோம் என்பது மிக முக்கியம். குறைந்த வயதில் ஓய்வுக்குத் திட்டமிட்டால் நிறைய சேமிக்க முடியும். வயது அதிகமாகும்போது முதலீடுகளுக்கான தவணை அதிகரிக்கும்.

திட்டமிடுதல் என்றால் வர இருக்கும் செலவுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதுதான். நாம் ஓய்வு பெறும்போது பணவீக்கம் எப்படி இருக்கும். அப்போது நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தால் சரியாக இருக்கும், என்ன செலவுகள் எல்லாம் வரும் என்பதையெல்லாம் திட்டமிட வேண்டும்.

முதலீட்டுக்குப் பிறகு செலவு செய்தல்:

நமது வாழ்க்கையில் செலவுகள் பல்வேறு வகையில் வரும். திருமணம், வீடு, கார் வாங்குவது, குழந்தைகளின் கல்விக்கான செலவு எனப் பட்டியல் நீளும். இது போன்றவற்றுக்கு கடன் வாங்கி செலவு செய்வதைவிட முதலீட்டைச் செய்து அதைச் செலவு செய்வது சிறந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடன் பெற்று செலவு செய்தால் அதனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதில் தான் கவனம் செலுத்த முடியுமே தவிர, முதலீடுகள் செய்யமுடியாமல் போகலாம்.

தேவையில்லாத செலவுகளைக் குறைத்தல்:

பொதுவாகவே தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும். வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், உணவுப் பொருட்களுக்கான செலவு போன்றவை மாத சம்பளத்தில் 50 சதவீதத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது. ஷாப்பிங், விடுமுறை போன்றவற்றுக்கான செலவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சரிபார்த்துக் குறைக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வருவாய்:

ஒரு வேலையை மட்டும் செய்யாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்து வருமானத்தை அதிகரிக்கலாம். காலை 9 முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தபிறகு தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கு கற்றுக்கொடுத்தும் பணம் ஈட்ட முடியும். இதற்காக இணையதளங்களிலும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

முதலீட்டில் உள்ள ரிஸ்க்குகள்:

முதலீடு செய்யும் போது ரிஸ்க் குறைவாக உள்ளது என்றால் லாபம் குறைவாக இருக்கும். ரிஸ்க் அதிகம் உள்ளது என்றால் லாபம் அதிகம் இருக்கும். அதே நேரம் பணத்தை இழக்கவும் நேரிடும். எனவே உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியுமோ அதற்கு ஏற்றவாறு முதலீடு செய்யலாம். ரிஸ்க் உள்ள முதலீடுகள், ரிஸ்க் இல்லா முதலீடுகள் என பிரித்து முதலீட்டைச் செய்வதும் பாதுகாப்பான ஒன்று. ஒன்று போனால் மற்றொன்று நம்மைக் காப்பாற்றாமலா போய்விடும்..!

மேலும் பார்க்க:

First published:

Tags: Personal Finance, Retirement