• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அஞ்சலக சேமிப்பு : கடைசி வரை கைவிடாத திட்டம்.. பிளான் பண்ணி முதலீடு செய்வது எப்படி?

அஞ்சலக சேமிப்பு : கடைசி வரை கைவிடாத திட்டம்.. பிளான் பண்ணி முதலீடு செய்வது எப்படி?

அஞ்சலக சேமிப்பு

அஞ்சலக சேமிப்பு

அஞ்சலக சேமிப்பில் உங்களது பணம் 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

  • Share this:
    அஞ்சலக சேமிப்பை சிறந்த சேமிப்பு என்று சொல்ல பல காரணங்கள் இருக்கு. வட்டி, வருவாய், பாதுகாப்பு, வரிச்சலுகை என இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து லாபம் மாறுபடும். இன்று நாம் பார்க்க போவது அஞ்சலக சேமிப்பில் அதிக லாபம் தரும் திட்டங்கள் பற்றி தான்.

    அஞ்சலகத்தில் அதிக லாபம் தரக்கூடிய முதல் திட்டம் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு அவர்களது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கின்றன.போஸ் ஆபீசில் முன்கூட்டியே சேமித்து வைத்து ஓய்வு பெற்ற பின்னர் நிலையான வருமானம் தரும் அளவுக்கு சிறந்த சேமிப்புத் திட்டங்களும் இருக்கின்றன. ஃபிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வைப்பு நிதித் திட்டம் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கான முதல் தேர்வாக இருந்து வருகிறது. நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் உங்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது வருடாந்திர அளவில் நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. காலாண்டு அடிப்படையில் வழக்கமான வட்டி வருமானத்தை ஈட்ட, குறைந்தபட்ச வயது வரம்பு 60 கொண்ட முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் ரூ .15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

    இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் கிசான் விகாஸ் பத்திரத் திட்டமும் ஒன்றாகும். நீண்ட கால அடிப்படையில் இது நல்ல வருவாய் தரும் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இந்த கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது வந்தவர்கள் வாங்க முடியும்.

    நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும். இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. அடுத்தது, ரெகரிங் டெபாசிட் திட்டம். ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். ஐந்து ஆண்டுகள் மெச்சூரிட்டிக்கு பிறகு, தேவைப்பட்டால் டெபாசிட் கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம். அதிகபட்ச வரம்பில்லாமல் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ .100 வைப்பதன் மூலம் தபால் அலுவலகம் மீண்டும் மீண்டும் வரும் வைப்புத் திட்டம் உங்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்கும்.

    ரூ. 34 சேமித்து போஸ்ட் ஆபீஸில் லட்சாதிபதி ஆகலாம் தெரியுமா? ஆச்சரியம் தரும் திட்டத்தின் முழு விபரம்!

    பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த வழியாக உள்ளது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் உள்ளன. ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையைச் சேமித்து நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை ஈட்ட பிஎஃப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி தொகை தான். இந்த திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

    கடைசியாக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இதில் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இத்திட்டத்தின் வட்டி 7.6 விழுக்காடு ஆகும். இதில், உங்களது பணம் 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: