• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நம்பி முதலீடு செய்தால் ரூ. 35 லட்சம் ரிட்டன்.. போஸ்ட் ஆபீஸில் இப்படியொரு சிறுசேமிப்பு திட்டமா?

நம்பி முதலீடு செய்தால் ரூ. 35 லட்சம் ரிட்டன்.. போஸ்ட் ஆபீஸில் இப்படியொரு சிறுசேமிப்பு திட்டமா?

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டம்

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டம்

இந்த பாலிசியின் மிகப்பெரிய சலுகையே போஸ்ட் ஆபீஸ் வழங்கும் போனஸ் தொகை ஆகும்

  • Share this:
    வருவாயை பெருக்கும் திட்டமாக அதே போல் கடைசி வரை உங்கள் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கும் முக்கியமான சேமிப்பு திட்டம் பற்றி தான் பார்க்க போகிறோம்.

    ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை விட, எப்படி சேமிக்கிறார் என்பதே முக்கியமான விஷயம். பணத்தை சேமிப்பது அனைவரும் செய்வதுதான் என்றாலும், அதிக வருவாய் கிடைக்கும் வகையில் முதலீடு திட்டங்களை தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியமான ஒன்று. அந்த வகையில் ரிஸ்க் இல்லாத முதலீடு.. வங்கியை விட சிறந்த லாபம். இப்படி அஞ்சல் சேமிப்பில் ஏகப்பட்ட சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க போவது கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டம் பற்றி தான்.

    இந்த திட்டத்தை சிறந்த சேமிப்பு என்று சொல்ல இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான் காரணம்.தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் கிராம சுரக்‌ஷா யோஜனா. இந்த திட்டத்தில் நீங்கள் சிறந்த முதிர்வு தொகையை பெற முடியும். உங்களுக்கு 80 வயது ஆகும் போது, உங்களின் சேமிப்புக்கான மொத்த தொகை மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு சென்றுவிடும். நீங்கள் சேமித்த பணம் எப்படியாவது உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

    19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமக்களும் இந்த கணக்கை துவங்கி குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கான ப்ரீமியத்தை நீங்கள் மாதாந்திர முறையில் செலுத்த வேண்டும். காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது வருடாந்திர முறையிலும் உங்கள் வசதிகேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இடையில் பணம் செலுத்த இயலவில்லை என்றால் நிலுவை தொகையை கட்டி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தினமும் ரூ. 50 சேமித்தால் 35 லட்சம் பெறலாம். நீங்கள் 10 லட்சத்திற்கு கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டதில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் தினமும் ரூ. 50 சேமித்து மாதம் ரூ. 1,515 பிரீமியம் தொகையை 55 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அப்போது வட்டியுடன் சேர்த்து பாலிசி தாரருக்கு மெச்சூரிட்டி பலனாக ரூ .34.60 லட்சமாக வழங்கப்படும். உங்கள் 20 வயதில் நீங்கள் இந்த திட்டத்தை தொடங்கினால் கண்டிப்பாக இந்த திட்டத்தின் பலனை முழுமையாக பெறலாம். தேவைப்பட்டல் இடையிலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்

    அடேங்கப்பா! கெத்து காட்டும் அஞ்சல் சேமிப்பு.. 14 லட்சம் பெறுவதற்கு தினமும் ரூ.95 இருந்தால் போதும்

    இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த காப்பீட்டுத் திட்டம் பாலிசி வாங்கிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது. மேலும் வாடிக்கையாளர் பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யும் வசதியும் உள்ளது. இந்த பாலிசியின் மிகப்பெரிய சலுகையே போஸ்ட் ஆபீஸ் வழங்கும் போனஸ் தொகை ஆகும். கடைசியாக வெளியாகிய அறிவிப்பின்படி, ஆண்டுக்கு 1,000 ரூபாய்க்கு ரூ.65 என போனஸ் கிடைக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: