ஹோம் /நியூஸ் /வணிகம் /

123 மாதங்களில் உங்கள் முதலீடு தொகை இரட்டிப்பாகும்... அசத்தல் சிறுசேமிப்பு திட்டம்!

123 மாதங்களில் உங்கள் முதலீடு தொகை இரட்டிப்பாகும்... அசத்தல் சிறுசேமிப்பு திட்டம்!

கிசான் விகாஸ் பத்ரா

கிசான் விகாஸ் பத்ரா

நீங்கள் 1 லட்சம் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் டிசம்பர் 29, 2031 அன்று உங்கள் தொகை 2 லட்சமாக உயர்ந்து இருக்கும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டிய மிக சிறந்த சிறுசேமிப்பு திட்டமான கிசான் விகாஸ் பத்ரா குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

  சமீப காலமாக பல முன்னணி வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டியை உயர்த்தி வருவதை பார்க்க முடிகிறது.எனவே முதலீட்டாளர்கள் அதிக வட்டி விகிதங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வங்கியைக் கண்டறிய துடிக்கிறார்கள். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) சமீபத்தில் எப்டி திட்டங்களின் வட்டியை 80 அடிப்படைப் புள்ளிகள் வரை  உயர்த்துவதாக அறிவித்தது.

  இதனைத்தொடர்ந்து SBI இப்போது பொதுமக்களுக்கு அதிகபட்ச வட்டியை வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.25% வீதம், மற்றும் மூத்த குடிமக்கள் 5 முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 6.90% என வழங்கி வருகிறது.

  அந்த முக்கியமான சேமிப்பு திட்டத்துக்கு வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி!

  இன்னும் சிறந்த வட்டி விகிதங்களை எதிர்பார்க்கும் நிலையான வருமான முதலீட்டாளர்கள், அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமான கிசான் விகாஸ் பத்ரா பற்றி தெரிந்துக் கொண்டால் நல்லது. இந்த திட்டமானது முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்குவது மட்டுமல்லாமல், SBI FDஐ விட அதிக வட்டி விகிதங்களையும் வழங்குகிறது என்பதையும் கவனியுங்கள்.

  கிசான் விகாஸ் பத்ரா :

  மத்திய அரசின் கீழ் செயல்படும் சிறு சேமிப்பு திட்டம் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஆகும். இதில் முதலீட்டு தொகை இரட்டிப்பாகும், 123 மாதங்களுக்கு (10 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள்). ஒருவர் கூட்டுக் கணக்கு (3 பெரியவர்கள் வரை), தனி கணக்கு, மைனர் கணக்கு போன்ற கணக்குகளை கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் தொடங்கலாம். இதன் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1000.

  உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 6 சேமிப்பு திட்டங்கள்..!

  இந்த திட்டத்தில் உங்கள் வரியை 80C,80D & 10(10D) சேமிக்கலாம். கணக்கு வைத்திருப்பவர் பெயரிடப்பட்ட அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளை விட்டு வெளியேறும் போது, ​​கூட்டு கணக்கு  வைத்திருப்பவர்களை விட்டு வெளியேறும் போது, ​​நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் போது, ​ KVP கணக்கு  ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு மாற்றப்படலாம்.

  சமீபத்தில் கிசான் விகாஸ் பத்ராவின் வட்டி விகிதங்கள் மாறப்பட்டன. முந்தைய வட்டி விகிதம் 6.9 சதவீதம் மற்றும் 124 மாத முதிர்வு காலத்துடன் ஒப்பிடுகையில், புதிய விகிதம் 7 சதவீதமாகவும், முதிர்வு காலம் 123 மாதங்களாகவும் இருக்கிறது. இதனால் இந்த வட்டி விகிதம் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பிஓபி, பிஎன்பி வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை விட அதிகமாக உள்ளது. இன்றைய தேதியில் நீங்கள் 1 லட்சம் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் டிசம்பர் 29, 2031 அன்று உங்கள் தொகை 2 லட்சமாக உயர்ந்து இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Post Office, Savings, SBI