Home /News /business /

அடி தூள்..! முக்கியமான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்கிறது

அடி தூள்..! முக்கியமான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்கிறது

சிறு சேமிப்பு

சிறு சேமிப்பு

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் தேசிய சேமிப்புத் திட்டம் (என்சிஎஸ்) போன்ற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 3 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மே மாதம் 4.40 சதவீதம், ஜூன் மாதம் 4.90 சதவீதம், ஆகஸ்ட் மாதம் 5.40 சதவீதம் என வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதமும், பிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளுக்கான வட்டி விகிதமும் கணிசமான அளவு உயர்ந்தது. சமீப காலமாக சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.

    இந்நிலையில் மத்திய அரசும் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் தேசிய சேமிப்புத் திட்டம் (என்சிஎஸ்) போன்ற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வட்டியை உயர்த்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.. இனி லாபம் அதிகமா கிடைக்கும்!

    ஏனெனில் முதல் இரண்டு முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட போதும், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 3வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முன்னதாக வெளியான அறிவிப்பில், 2022-23 நிதியாண்டின் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் ஜூலை 1, 2022 முதல் செப்டம்பர் 30 வரை எவ்வித மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஏப்ரல் 2022 முதல் 10 ஆண்டுக்கான வருமானம் (ஈல்ட்) 7 சதவீதத்தை விட அதிகரித்துள்ளது, வரவிருக்கும் மதிப்பாய்வில் விகிதத் திருத்தங்களை மேற்கொள்ள வலுவான காரணமாக அமைந்துள்ளது.

    மார்ச் 18, 2016ல் நிதி அமைச்சகத்தின் வட்டி கணக்கிடுவதற்கான சூத்திரத்தின் படி, பிபிஎஃப் சேமிப்பு கணக்கின் அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.56 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிபிஎஃப் சேமிப்பு திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல், சுகன்யா சம்ரித்தி சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் G-sec ஈல்ட்டை விட 75 அடிப்படை புள்ளிகளாக இருக்க வேண்டும், ஆனால் SSA தற்போது 7.6% வழங்குகிறது. மூத்த குடிமக்கள் திட்டத்தின் வட்டி விகிதம் G-sec ஈல்ட்டின் மூன்று மாத சராசரியை விட 100 அடிப்படை புள்ளிகள் அதிகமாக உள்ளது.

    கோடிகளில் வருமானம்.. உங்களுக்காகவே போஸ்ட் ஆபீஸ் தரும் மிகச் சிறந்த வாய்ப்பு!

    செப்டம்பர் 2020 முதல் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் உள்ளது. இந்நிலையில் கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டிற்கான Yield என்று கூறப்படும் வட்டி விகிதம் அதிகரித்து வருவதால், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, India post, Savings

    அடுத்த செய்தி