Home /News /business /

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அறிவிப்பு... PPF, NSC திட்டங்களில் இனி கிடைக்க போகும் வட்டி இதுதான்!

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அறிவிப்பு... PPF, NSC திட்டங்களில் இனி கிடைக்க போகும் வட்டி இதுதான்!

சிறு சேமிப்பு

சிறு சேமிப்பு

பிபிஎஃப்-ன் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக தொடரும். அதேசமயம் என்எஸ்சி-ன் (National Savings Certificate) வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.80 சதவீதமாக தொடரும்.

    2022-23 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை நிதி அமைச்சகம் மாற்றாமல் வைத்திருக்கிறது.

    சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி(PPF), சுகன்யா சம்ரித்தி கணக்குகள், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு, 5 ஆண்டு போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்ட் (RD), தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (NSC) போன்றவை அடங்கும்.

    கம்மியான வட்டியில் எந்த வங்கியில் நகைக் கடன் கிடைக்கும்? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

    சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022 தொடங்கி ஜூன் 30, 2022 வரை, 2021-22 நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்குப் அதாவது ஜனவரி 1, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை இருந்த விகிதங்களில் இருந்து மாறாமல் இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளது.

    பிபிஎஃப், சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம், என்எஸ்சி வட்டி விகிதங்கள்:

    நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின் படி, பிபிஎஃப்-ன் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக தொடரும். அதேசமயம் என்எஸ்சி-ன் (National Savings Certificate) வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.80 சதவீதமாக தொடரும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து 7.40 சதவிகிதம் அளிக்கப்படும் மற்றும் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்களுக்கு 5.5-6.7 சதவிகிதம்வட்டி கிடைக்கும். போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் இப்போது 6.6 சதவீத வட்டியைப் பெறும்.

    போஸ்ட் ஆபிஸ் 5 ஆண்டு கால டெபாசிட் தொகைக்கு 6.7 சதவீத வட்டியும், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்தொகைக்கு 5.8 சதவீத வட்டியும் கிடைக்கும். அதே சமயம் பெண் குழந்தை சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு 7.6 சதவீதம் வட்டியை பெறும். இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 வரை பொருந்தும்.

    சிம்புவை பற்றி சின்னத்திரை பிரபலத்தின் ஷாக்கிங் ஸ்டேட்மெண்ட்!

    கடந்த சில ஆண்டுகளாக ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற சேமிப்பு விருப்பங்களின் மீதான வட்டி விகிதம் குறைந்து வருகிறது. இதனால் முதலீடு செய்பவர்களின் கவனம் சிறு சேமிப்பு திட்டங்கள் மீது திரும்பி இருக்கிறது. வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள் குறைவாக இருக்கும் நேரத்தில, சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அப்படியே பராமரித்து வருகிறது.

    சமீபத்தில் 2021-22 நிதியாண்டுக்கான EPFக்கான வட்டி விகிதத்தை 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.1% ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த முடிவு நிலையான வருமான திட்டங்களை நம்பியிருக்கும் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு மிகவும் நல்ல விஷயமாக அமைந்துள்ளது.

    இதனிடையே 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மேலும் குறைக்க ரிசர்வ் வங்கி பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை டிசம்பர் 2021-ல் அரசு மதிப்பாய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Post Office, Savings

    அடுத்த செய்தி