இந்திய ஐ.டி., நிறுவனங்களை மிரட்டும் அமெரிக்காவின் பொருளாதாரம்!

2018-ம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக இருந்தநிலையில் 2019-ம் ஆண்டில் இது 2.3 சதவீதமாக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

news18
Updated: January 4, 2019, 9:35 PM IST
இந்திய ஐ.டி., நிறுவனங்களை மிரட்டும் அமெரிக்காவின் பொருளாதாரம்!
மாதிரிப் படம்
news18
Updated: January 4, 2019, 9:35 PM IST
அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் 167 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐ.டி., அவுட்சோர்சிங் துறை பாதிப்படைய வாய்ப்புள்ளது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது அமெரிக்காவின் ஃபார்ச்யூன் 1000 நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்காக செலவு செய்வதைக் குறைக்கும். இதனால் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் பாதிப்படையும்.

எனவே சந்தை வல்லுநர்கள் இந்திய ஐ.டி., நிறுவனங்களின் 4-வது காலாண்டு முடிவுகளை மிக உன்னிப்பாகக் கவனிக்க உள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் 2019 ஜனவரி 10-ம் தேதியும், விப்ரோ 2019 ஜனவரி 18-ம் தேதியும் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன.

அமெரிக்காவின் பொருளாதாரம் 2019-ம் ஆண்டு மந்தமாகவே இருக்கும் என்று கடந்த 2 மாதங்களாக கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக இருந்தநிலையில் 2019-ம் ஆண்டில் இது 2.3 சதவீதமாக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹிந்தரா என இந்தியாவின் டாப் 5 நிறுவனங்களின் வருவாய் 55 முதல் 70 சதவீதம் அமெரிக்காவிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருபக்கம் அவுட்சோர்சிங் அதிகம் செய்யும் நிறுவனங்கள் மீது வரி அதிகரிக்கப்படும் என்று கூறி வருகிறார். இருப்பினும் இந்திய ஐ.டி., நிறுவனங்கள் தொடர்ந்து அதிகமான அவுட்சோர்சிங் பணிகளைப் பெற்று வருகின்றனர்.

ஆனால் இந்தப் பொருளாதார மந்தநிலை கண்டிப்பாக இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கும். அதன் தாக்கமே இந்திய பங்குச்சந்தையில் கடந்த 2 நாட்களாக ஐ.டி., நிறுவனப் பங்குகள் சரிவுக்கான காரணம் என்று கூறுகின்றனர்.
Loading...
Also watch:

First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...