ஹோம் /நியூஸ் /வணிகம் /

நவம்பரில் வந்துள்ள நிதி மாற்றங்கள்.. எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தும் பொருளாதார வல்லுநர்கள்!

நவம்பரில் வந்துள்ள நிதி மாற்றங்கள்.. எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தும் பொருளாதார வல்லுநர்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சேவைக் கட்டணங்கள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் பல்வேறு நிதி நெருக்கடியில் இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் நிதி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் படி நவம்பரில் சில முக்கிய நிதி மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. எனவே இந்நேரத்தில் அவை என்னென்ன? என்பது பற்றி இங்கே தெரிந்துக் கொள்வோம்..

  ஆடிட்டிங் அறிக்கையுடன் வருமான வரி கணக்குத் தாக்கல்:

  2021- 2022 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கானக் காலக்கெடு அக்டோபர் 30 முதல் நவம்பர் 7, 2022 வரை ஏழு நாள்களுக்கு நீட்டிப்பு செய்துள்ளது வருமான வரித்துறை. எனவே  ரூபாய் 1 கோடிக்கு மேல் இருக்கும் வணிகத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் ஆடிட்டிங் (தணிக்கை) செய்திருக்க வேண்டும்.

  கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் கட்டணம் உயர்வு:

  இன்றைக்கு பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் தான் பணம் செலுத்துகின்றன. அதிலும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், நவம்பர் முதல் இதற்கானக் கட்டணங்களை அறிவித்துள்ளது வங்கி நிர்வாகம். குறிப்பாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாடகை செலுத்துகிறார்கள் என்றால் ரூ. 99 மற்றும் வரிகளுடன் செயலாக்கக் கட்டணத்தை செலுத்த வேண்டும் .  இந்த நடைமுறை வருகின்ற நவம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.

  RedGiraffe, Cred, Paytm மற்றும் Magic bricks உள்ளிட்ட பல மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளில் கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தலாம். இவ்வாறு கட்டணம் செலுத்தும் கிரெடிட் கார்டுகளுக்கு 0.4 – 2 சதவீதம் வரையிலான செயலாக்கக் கட்டணம் அதிகமாகும்.

  AJIO-ல் xlerate விற்பனையை தொடங்கிய ரிலையன்ஸ்... ஹர்திக் பாண்டியா விளம்பர தூதராக ஒப்பந்தம்

  வணிகர்களுக்கான EMI கட்டணம் உயர்வு:

  வணிகர்கள் பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணத்தை ரூபாய் 199 என்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு 14 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது.

  NRI சேமிப்புக் கணக்குகளுக்கானக் கட்டண மாற்றம்:

  நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சேவைக் கட்டணங்களையும் , சேமிப்புக் கணக்குகளான அபராதங்களையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு மாதத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 50 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாஸ்புக்கைப் புதுப்பிக்க ஒரு பக்கத்திற்கு ரூ.25 மற்றும் வங்கி கவுண்டரிலிருந்து டெபிட் கார்டு பின்னை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றால் ரூபாய் 25 அபாரதமாக வசூலிக்கப்படும். காசோலைத் திரும்ப பெற்றால், ரூ.100ல் இருந்து ரூபாய் 200 ஆக உயர்த்தியுள்ளது. நிதி அல்லாத காரணங்களுக்காக காசோலையைத் திருப்பித் தருவதற்கு வங்கி ரூ.50 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

  தீ எதிர்ப்பு பாலிஸ்டர்... புதுமையான Nofia தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ரிலையன்ஸ்

   இதுப்போன்று பல்வேறு நிதி மாற்றங்கள் நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பதற்கு அறிவுறுத்துகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்..

  Published by:Srilekha A
  First published:

  Tags: Banking, Personal Finance, Savings