ஹோம் /நியூஸ் /வணிகம் /

பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1 முதல் தடை..! இந்த பொருளையெல்லாம் பயன்படுத்தினால் அபராதம்

பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1 முதல் தடை..! இந்த பொருளையெல்லாம் பயன்படுத்தினால் அபராதம்

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

Pan Blastic | அடுத்த மாதம் அதாவது ஜூலை 1, 2022 முதல் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கை மத்திய அரசு தடை செய்து உள்ளது.  

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

அடுத்த மாதம் அதாவது ஜூலை 1, 2022 முதல் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கை மத்திய அரசு தடை செய்து உள்ளது. வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பாலிஸ்டிரீன் மற்றும் எக்ஸ்பேன்டட் பாலிஸ்டிரீன் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், இறக்குமதி, விற்பனை, இருப்பு மற்றும் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. மிக நீண்ட ஆண்டுகளுக்கு நமது சுற்றுபுறத்தில் அழியாமல் தங்கி இறுதியில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸாக மாறி, முதலில் நமது உணவு ஆதாரங்களிலும் பின் நம் உடலிலும் நுழைகின்றன. இந்நிலையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.

சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் என்றால் என்ன.?

பெயர் குறிப்பிடுவது போல, ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்குகள் அல்லது பயன்படுத்தி எறிய கூடிய பிளாஸ்டிக்குகள், தூக்கி எறியும் முன்பு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது. பெரும்பாலும் இவை நம் சுற்றுப்புறத்தில் இருந்து சரியான முறையில் அகற்றப்படுவதில்லை. உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியாது.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த 4 வழிகளை அவசியம் பின்பற்றுங்கள்!

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் மூன்றில் ஒரு பங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை தூக்கி எறியும் பிளாஸ்டிக்குகள் பெட்ரோலியம் சார்ந்தவை என்பதால், அவற்றை மறுசுழற்சி செய்வது கடினம். மேலும் இவ்வகை பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் முதல் 100 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்று உள்ளது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மற்றும் சேவைகளை நோக்கி நகர்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

ஜூலை 1, 2022 முதல் என்னென்ன பொருட்களுக்கு தடை.!

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ள பொருட்கள் பின்வருமாறு:

* பலூன் ஸ்டிக்ஸ்

* சிகரெட் பேக்ஸ்

* பிளேட்கள், கப்கள், கிளாஸ்கள், ஃபோர்க்ஸ் , ஸ்பூன்கள், கத்திகள், ட்ரேக்கள் உள்ளிட்ட கட்லரி பொருட்கள்

* பிளாஸ்டிக் ஸ்டிக்ஸ் கொண்ட இயர்பட்ஸ்

* ஸ்வீட் பாக்ஸ்களில் சுற்றப்படும் பிளாஸ்டிக் வ்ரேப்பர்

* கேன்டி மற்றும் ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ்

* இன்விடேஷன் கார்ட்ஸ்

* அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன்

* 100 மைக்ரானுக்கு கீழான PVC பேனர்ஸ்

* ஸ்ட்ராக்கள்

* ஸ்டிர்ரர் (கிளறிகள்)

எனவே வரும் ஜூலை 1 முதல் சிகரெட் பாக்கெட்ஸ், பிளாஸ்டிக் பிளேட்ஸ், கப்ஸ், கிளாசஸ், ஃபோர்க்ஸ், ஸ்பூன்கள், கத்திகள், ஸ்ட்ராக்கள், பிளேடுகள் என பிளாஸ்டிக் கலந்தது எதுவும் இருக்காது. மேலும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 இன் படி, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா ஆகியவற்றை சேமிக்க, பேக்கிங் அல்லது விற்பனை செய்ய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை உள்ளது.

ஏன் தடை.?

இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டில் 34 லட்சம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளும், 2018-19 ஆம் ஆண்டில் 30.59 லட்சம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகியுள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் அபாயகரமான புகை மற்றும் வாயுக்களை வெளியிடுவதால் இவை எரிக்கப்படாது. எனவே, மறுசுழற்சி தவிர பிளாஸ்டிக் பொருட்களை சேமிப்பது மட்டுமே சாத்தியமான தீர்வாக உள்ளது. இந்த தடை பிளாஸ்டிக் கழிவை குறைக்க பெரிதும் உதவும்.

எவ்வாறு அமல்படுத்தப்படும்.?

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே போல ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் புதிய வணிக உரிமங்களை வழங்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும். தடையை மீறும் நபர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் கீழ் அபராதம் விதிக்கப்படலாம். 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

First published:

Tags: Plastic Ban