ஹோம் /நியூஸ் /வணிகம் /

உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பான முறையில் பராமரிக்க உதவும் எளிய வழிகள்..!

உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பான முறையில் பராமரிக்க உதவும் எளிய வழிகள்..!

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

Credit Score | சிறந்த கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்துபவர்களாகவும், மோசமான கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்கள் அதிக ஆபத்துள்ள கடன் வாங்குபவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரெடிட் ஸ்கோர் என்பது நீங்கள் கடனை எவ்வளவு பொறுப்புடன் திருப்பி செலுத்துகிறீர்கள் என்பதை கடனளிப்பவர்களுக்கு தெரியப்படுத்துகிறது. கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு லிமிட் உள்ளிட்ட பல நிதி சார்ந்த விஷயங்களில் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ அவ்வளவு எளிதாக புதிய கடன்களை பெறலாம். உங்களுக்கு இருக்கும் அதிக கிரெடிட் ஸ்கோர் நீங்கள் அடுத்தடுத்து புதிய கடன்களை வாங்குவதாக இருந்தால் அதற்கான குறைந்த வட்டி விகிதங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். சுருக்கமாக சொன்னால் சிறந்த கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்துபவர்களாகவும், மோசமான கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்கள் அதிக ஆபத்துள்ள கடன் வாங்குபவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

ஒருவரது கடன் விண்ணப்பத்தை ஒரு கடன் வழங்குநர் அங்கீகரிக்கும் முன் அவரது கிரெடிட் ஸ்கோரான CIBIL ஸ்கோரை பார்க்கின்றனர்.எனவே உங்களது கிரெடிட் ஸ்கோரை சிறப்பாக பராமரிப்பதற்கான சில முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

பழைய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் விடாதீர்கள்:

உங்கள் வசம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருந்தால் புதிதாக வாங்கிய கிரெடிட் கார்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், உங்கள் வசம் உள்ள பழைய கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்துங்கள். பழைய கார்டை ஆக்டிவாக வைத்திருக்க சில மாதங்களுக்கு ஒருமுறை அதை பயன்படுத்துங்கள். சிபில் ஸ்கோரை சரியாக பராமரிக்க இது உதவும்.

Also Read : கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா.? மறக்காமல் இதை மட்டும் ஃபாலே பண்ணிடுங்க.!

தேவைக்கேற்ப மட்டுமே புதிய கிரெடிட்டுக்கு விண்ணப்பியுங்கள்:

குறுகிய காலத்தில் பல கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். உங்களிடம் ஏற்கனவே கிரெடிட் கார்டு இருக்கும்பட்சத்தில் புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்களுக்கு என்ன கிரெடிட் தேவை இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளலாம். பல கிரெடிட் கார்டுகளின் தேவை உங்களுக்கு இருப்பின் ஒரு கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பம் வழங்கிய சில மாதங்களுக்கு பிறகு அடுத்த கார்டுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அதே போல கண்டிப்பாக பணம் தேவைப்பட்டால் மட்டுமே புதிய கிரெடிட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வப்போது கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கவும்:

ஆண்டுக்கு ஒருமுறை இலவச கிரெடிட் ஸ்கோரை பெற உங்களுக்கு உரிமை உண்டு. இருப்பினும், நீங்கள் சமீபத்தில் அதிகக் கடனைப் பெற்றிருந்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மாறியிருக்கிறதா, அப்படியானால், எவ்வளவு என்று பார்க்க வேண்டும். அதில் ஏதேனும் பிழைகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also Read : ஒரு தனி மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது நல்லது? விடை இதோ!

சரியான நேரத்தில் பேமென்ட் செய்யுங்கள்:

உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பாக பராமரிப்பதற்கான எளிய ஆனால் மிக முக்கிய வழி உங்கள் வீட்டு கடன், கார் கடன் அல்லது தனிநபர் கடன் போன்ற கடன்களின் இன்ஸ்டால்மென்டை சரியான நேரத்திற்கு செலுத்தி விடுங்கள். கடன்களின் EMI-க்கள் அல்லது கிரெடிட் கார்டு நிலுவை தொகைகளை தாமதமாக செலுத்தும் பழக்கம் உங்களது CIBIL ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கிறது. ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை, பல நாட்கள் தாமதமாக உங்கள் டியூவை செலுத்துவது உங்கள் மீதான பிளாக் மார்க்காக அமைகிறது. ஆட்டோமேட்டட் பேமென்ட்ஸ் முறையில் உங்கள் அக்கவுண்ட்டிலிருந்து கடனுக்கான தவணை கழிக்கப்படும் என்றால், அந்த அக்கவுண்ட்டில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கோ-அப்ளிகேன்ட் கடனை சரியாக செலுத்துகிறாரா.?

ஒரு கடனில் பொறுப்பாக இருக்கும் கோ-அப்ளிகேன்ட், தனது பங்கை சரியாக கொடுக்க முடியாவிட்டால் முக்கியமாக கடன் வாங்கியவரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம். எனவே கோ-அப்ளிகேன்ட்டுடன் நீங்கள் கடன் வாங்கி இருந்தால் அவர் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றுகிறாரா என்பதை சரியாக கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.

Published by:Selvi M
First published:

Tags: Bank Loan, Credit Card, EMI, Tamil News