ஹோம் /நியூஸ் /வணிகம் /

திருமணமான பெண்களே... உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

திருமணமான பெண்களே... உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

ஆதார்

ஆதார்

முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

இன்றைய சூழலில் வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு, எரிபொருள் இணைப்பு என எல்லாவற்றிற்கும் ஆதார் என்பது தேவைப்படுகிறது. பாஸ்போர்ட் எடுக்க உட்பட ஆதார் அனைத்து தரவுகளுக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரின் 12 இலக்க எண் தான் ஒரு இந்திய குடிமகனின் ஆதாரமாகவே மாறி வருகிறது. இந்நிலையில் அதன் விவரங்களில் பிழை இருந்தால் எப்படி சரி செய்வது என்று சொல்கிறோம்…

முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எங்கே சென்று எப்படி மாற்றுவது என்று திணறி வருகின்றார். கவலைப்படாதீங்க மக்கா.. அது ரொம்ப ஈஸி தான்.திருமணமான பின்னர் தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை மாற்ற ஆன்லைன் வழியாகவும், மாற்றலாம்.

இதையும் படிங்க :ஆதார் கார்டு: 10 முக்கிய சந்தேகங்களும் விளக்கங்களும்!

ஆன்லைன் மூலம் மாற்ற..

 • முதலில் உங்கள் ஆதார் அட்டையையும் உங்கள் திருமண சான்றிதழையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
 • திருமண சான்றிதழை ஸ்கேன் செய்தோ அல்லது தெளிவாக படம் எடுத்தோ கையில் வைத்துக்கொள்ளுங்கள்.
 • https://myaadhaar.uidai.gov.in/ என்ற ஆதாரின்  இணைய தளத்திற்கு செல்லவும். அதில் உங்கள் ஆதார் எண் பதிவிடவும்
 • ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பப்படும் அதை உள்ளிட்டு உங்கள் ஆதார் கணக்கிற்குள் உள்நுழையவும்.
 • வலது மேல் ஓரத்தில் உங்கள் ஆதார் கணக்குடன் இணைத்த புகைப்படத்துடன் உங்கள் ஆதார் கணக்கு திறக்கும்.
 • அதில் உங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், வீடு விலாசம், பிறந்த தேதி மாற்றும் தெரிவு இருக்கும். அதை க்ளிக் செய்யவும்.

 • அதில் நீங்கள் எதை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் கேட்கும். அதில் பெயர் மாற்றமென்று கொடுத்து தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை உள்ளிட்டு மாற்றவும்.

என்ன சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்?

உங்களது கணவர் இவர் என்று நிரூபிக்கும் சான்றுகள் குறிக்கும் திருமண பதிவு சான்றிதழை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு ஆகும்?

பெயர்மாற்றத்திற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதையும் படிங்க :மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதில் புதிய வசதி.. 2 நிமிடம் கூட ஆகாது.. இதோ அதற்கான ஈஸியான ஸ்டெப்ஸ்

எப்படி அப்டேட்டுகளை பார்ப்பது?

பின்னர் உங்கள் கோரிக்கைக்கான எண் தரப்படும். அதை வைத்து உங்கள் பெயர் மாற்றம் குறித்த அப்டேட்களை பார்த்துக்கொள்ளலாம்.

புதிய கார்டு எப்போது கிடைக்கும்?

பெயர்மாற்றப்பட்ட புதிய ஆதார் கார்டு 90 நாட்களுக்குள் உங்கள் ஆதார் கார்டில் உள்ள முகவரிக்கு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நேரடியாக எப்படி மாற்றுவது?

உங்களுடைய ஆதார் கார்டு, திருமண பதிவு சான்று, ஆகியவற்றின் நகல்களோடு அருகில் உள்ள இ சேவை மையத்திலோ , ஆதார் சேவை மையத்திலோ எளிதாக விண்ணப்பிக்கலாம். அதற்கும் கட்டணம் 50 தான். இனி எப்படி பெயரை மாற்றுவது என்று தயங்காமல் எளிதாக மாற்றுங்கள்.

First published:

Tags: Aadhaar card