பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி சமூக வேலைத்தள நிறுவனமான ஷேர்சாட் நிறுவனம் மற்றும் அதன் ஷார்ட் வீடியோ தளமான மொஹல்லா டெக் நிறுவனம் தனது 20 சதவீத ஊழியர்களை வேலை விட்டு நீக்கியுள்ளது. ஷேர் சாட் நிறுவனத்தில் சுமார் 2,100 பேர் பணியாற்றிய நிலையில், இந்த பணி நீக்க நடவடிக்கை காரணமாக 500 பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, " எங்கள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் துயரமான, கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். ஆரம்பத்தில் இருந்து எங்களுடன் பணிபுரிந்த 20 சதவீத சிறந்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நிறுவனத்தின் முதலீடுகள் சந்தையின் வளர்ச்சி சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலையற்ற பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்த கடினமங்களை தாண்டி தான் மீண்டு வர வேண்டும்" என்றுள்ளார்.
ஷேர்சாட் நிறுவனம் தனது தேவை அளவுக்கு மீறி ஆட்களை பணியமர்த்தியதே இது போன்ற சூழலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தான் 255 மில்லியன் டாலர் மதிப்புக்கு நிதியை இந்நிறுவனம் fund rise செய்தது.உக்ரைன் போர் தாக்கத்தால் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. குறிப்பாக, டெக் சார்ந்த நிறுவனங்களில் தான் இது போன்ற பணி நீக்க நடவடிக்கை வெகுவாக உள்ளன.
இதையும் படிங்க: இன்னும் ஒரு வருஷம்.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி… உலக வங்கி சொன்ன முக்கியத் தகவல்!
அமேசான் இந்தியா நிறுவனம் சமீபத்தில் சுமார் 1,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. வேலையை விட்டு வெளியேறிய ஊழியர்களுக்கு 5 மாத Severance Pay தொகையை அமேசான் வழங்கியுள்ளது. ஷேர்சாட் நிறுவனமும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு டிசம்பர் 2022 வரையிலான variable pay தொகையை 100 சதவீதம் வழங்குவோம் என ஊழியர்களுக்கு உறுதியளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.