Home /News /business /

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை அதிகரிப்பு - கலங்கும் இல்லத்தரசிகள்..

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை அதிகரிப்பு - கலங்கும் இல்லத்தரசிகள்..

சமையல் எண்ணெய் விலை உயர்வு

சமையல் எண்ணெய் விலை உயர்வு

Virudhunagar Oil Prices : சன் பிளவர் ஆயிலை பொறுத்தவரையில் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி அதிகரிதுள்ளதால் அதன் விலையானது விருதுநகர் மார்கெட்டில் குறைந்துள்ளது.

    விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேசமயம், பாமாயில் மற்றும் சன் பிளவர் ஆயில் லிட்டருக்கு ரூ.20 குறைந்துள்ளது.

    விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த வாரம் நல்லெண்ணெய் கிலோ ரூ.260க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.20 உயர்ந்து ரூ.280க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் கடலை எண்ணெய் கிலோ ரூ. 180 விற்ற நிலையில் தற்போது ரூ. 20 உயர்ந்து ரூ.200க்கு விற்பனையாகிறது.

    பாமாயில்,  சன்பிளவர் ஆயில் விலை குறைந்துள்ளது. பாமாயில் கடந்த வாரம் ரூ. 150க்கு விற்றது தற்போது ரூ.130க்கு ரூ 20 விலை குறைந்து விற்கப்படுகிறது. சன் பிளவர் ஆயிலும் விலை குறைந்து காணப்படுகிறது. கடந்த வாரம் ரூ.195 விற்கப்பட்டது தற்போது ரூ 20 குறைந்து ரூ. 175க்கு விற்கப்படுகிறது.

    பாமாயில், சன் பிளவர் ஆயிலைப் பொறுத்தவரையிலும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி அதிகரிதுள்ளதாலும் விலை குறைந்து காணப்படுகிறது. பாமாயில் விலை மாற்றத்தைப் பொறுத்தவரை,  உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி இல்லாமல் காரணமாகவும், கலால் வரி கூடுதலாக விதிப்பதாலும் கடுமையாக விலை உயர்ந்திருந்திருந்தது.

    Must Read : சென்னையில் முகக்கவசம் கட்டாயம்.. கொரோனா அதிகரிப்பதால் மாநகராட்சி உத்தரவு

    தற்போது இறக்குமதி அதிகரித்துள்ளதால் பாமாயில் விலை விலை சற்று குறைந்து காணப்படுகிறது. வரும் காலங்களில் அதன் விலை மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நல்லெண்ணெய் எள் தட்டுப்பாட்டாலும், கடலை எண்ணெய் கடலை தட்டுப்பாட்டாலும் விலை உயர்ந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எண்ணெய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    செய்தியாளர் - கணேஷ்நாத் அய்யம்பெருமாள், விருதுநகர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Refined oil, Virudhunagar

    அடுத்த செய்தி