ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஹோட்டல், ரெஸ்டாரண்ட் பில்லில் சேவை வரி இருந்தால் செலுத்த வேண்டாம் - மத்திய அரசு உத்தரவு

ஹோட்டல், ரெஸ்டாரண்ட் பில்லில் சேவை வரி இருந்தால் செலுத்த வேண்டாம் - மத்திய அரசு உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

சேவைக் கட்டணத்தை வேறு எந்த பெயரிலும் வசூல் செய்யக் கூடாது. வாடிக்கையாளரை சேவைக் கட்டணம் செலுத்துமாறு எந்தவொரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் கட்டாயப்படுத்த கூடாது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் உணவுக்கான ரசீதுகளில் சேவைக் கட்டணத்தை தாமாக அல்லது இயல்பாகவே சேர்க்கும் நடவடிக்கை கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான உத்தரவை சிசிபிஏ அமைப்பு கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது.

நாட்டில் உள்ள வாடிக்கையாளர் பாதுகாப்பு அமைப்பின் உச்சப்பட்ச அமைப்பாக சிசிபிஏ திகழுகிறது. ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் சேவைக் கட்டணம் என்ற பெயரில் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையளர் உரிமை மீறல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை சிசிபிஏ மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வாடிக்கையாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “சேவைக் கட்டணம் வசூல் செய்வதாக கூறி நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் உரிமை மீறலை மேற்கொள்ளும் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை சிசிபிஏ அமைப்பு மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெஸ்டாரண்ட் சேவைக் கட்டணம் தொடர்பில் சிசிபிஏ வெளியிட்டுள்ள விதிமுறைகள் என்ன?

சிசிபிஏ வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளின்படி, ஹோட்டல்கள் அல்லது ரெஸ்டாரண்ட்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவுக்கான ரசீது வழங்கும்போது தாமாக அல்லது இயல்பாக சேவைக் கட்டணம் வசூல் செய்யக் கூடாது.

சேவைக் கட்டணத்தை வேறு எந்த பெயரிலும் வசூல் செய்யக் கூடாது. வாடிக்கையாளரை சேவைக் கட்டணம் செலுத்துமாறு எந்தவொரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் கட்டாயப்படுத்த கூடாது. சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளர் தாமக முன்வந்து, அவரது சொந்த விருப்பத்தின் பேரில் செலுத்தக் கூடியது என்பதை தெளிவாக கூறிவிட வேண்டும்.

Also Read : உங்கள் ஐசிஐசிஐ அக்கவுண்ட்டை வேறு கிளைக்கு ஆன்லைன் மூலம் எப்படி மாற்றுவது.?

சேவைக் கட்டணம் செலுத்த மறுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பது அல்லது வேறு ஏதேனும் சேவைகளை வழங்க மறுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. உணவுக்கான ரசீது மற்றும் மொத்த ரசீது மீதான ஜிஎஸ்டி வரி போன்றவற்றுடன் சேர்த்து சேவைக் கட்டணம் வசூல் செய்ய முடியாது.

வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம் :

எந்தவொரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட்களில் தன்னிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று வாடிக்கையாளருக்கு தெரிய வந்தால் அவர் அதுகுறித்து ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம் என்று சிசிபிஏ தெரிவித்துள்ளது.

விதிமுறைகளுக்கு புறம்பாக எந்தவொரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட்களின் ரசீதுகளில் சேவைக் கட்டணம் சேர்க்கப்பட்டிருந்தால் அதை நீக்கம் செய்யுமாறு வாடிக்கையாளர் கோரிக்கை வைக்கலாம். இது மட்டுமல்லாமல் தேசிய வாடிக்கையாளர் உதவி மைய எண் 1915ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது என்சிஹெச் அமைப்பின் மொபைல் ஆப் மூலமாக புகாரை பதிவு செய்யலாம்.

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கை தொடர்பாக வாடிக்கையாளர் ஆணையத்திடமும் வாடிக்கையாளர்கள் புகார் கூறலாம். விரைவான மற்றும் சுமூகமான தீர்வு கிடைக்க புகார்களை www.e-daakhil.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் அமைந்துள்ள பகுதியின் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம் அல்லது com-ccpa@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு புகார் அனுப்பி வைக்கலாம்.

First published:

Tags: Business, Central government, Hotel Food