இன்றைய (செப்டம்பர் 9-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை நெருங்கியும், சில மாநிலங்களில் 100ஐக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

 • Share this:
  பெட்ரோல், டீசல் விலையானது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில் பெட்ரோல் 98.96 ரூபாய்க்கும், டீசல் 93.26 ரூபாய்க்கும் விலையில் மாற்றம் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

  கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாடடின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை நெருங்கியும், சில மாநிலங்களில் 100ஐக் கடந்து விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

  இந்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய்கும் கீழேயே இருந்து வருகின்றது. அத்துடன், கடந்த சில நாட்களாக விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

  கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுதும் மார்ச் மாத இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மே மாதம் வரையில், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அதன் பிறகு அவற்றின் விலையை தொடர்ந்து மாற்றி அமைத்து வருகின்றன.

  Must Read : இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே அக்டோபர் மாதத்திற்குள் இதை செய்து விடுங்கள்!

  இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையைக் குறைக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆரவலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: