• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இன்றைய (செப்டம்பர் 13-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய (செப்டம்பர் 13-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்

பெட்ரோல்

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் எதுவும் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலையானது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96 க்கும், டீசல் 93.26 ரூபாய்க்கும் விலை மாற்றம் எதுபும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை நெருங்கும் நிலையில் விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தமிழக பட்ஜெட்டில், பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதனைத் தொடர்ந்து, அன்று மாலையே விலை குறைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய்கும் கீழேயே இருந்து வருகின்றது. அத்துடன், கடந்த ஒருவார காலமாக விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்து வருவதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

    கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுதும், கடந்த மே மாதம் வரையில், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அதன் பிறகு அவற்றின் விலையை தொடர்ந்து மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

    Must Read : எத்தனை முறை ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை! இந்த வங்கியில் மட்டுமே சாத்தியம்

    செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: