முதல்முறையாக 50,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்.. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதால் புதிய உச்சம்....

Youtube Video

வர்த்தக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

 • Share this:


  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து உலகளவில் பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ரிலையன்ஸ் இன்டஸ்டரீஸ், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். இதனால் மும்பை பங்குச்சந்தையில் 334 புள்ளிகள் அதிகரித்து 50 ஆயிரத்து 126 என்ற உச்சத்தை எட்டியது.

  தேசியப்பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 14 ஆயிரத்து 720 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. 2014ல் 25 ஆயிரம் புள்ளிகளில் நடந்த சென்செக்ஸின் வர்த்தகம் கடந்த ஆறரை ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.

  ஆட்டோமொபைல், தகவல் தொழிற்நுட்பத்துறை பங்குகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஜே.கே. டயர்ஸ் நிறுவன பங்குகள் ஒரே நாளில் 9 விழுக்காடு விலை உயர்ந்துள்ளது. 3ம் காலாண்டின் முடிவுகளை சில இந்திய நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து அவற்றின் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளன.

  மேலும் படிக்க...வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது - பியூஸ் கோயல்

  அமெரிக்க கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்ததன் காரணமாக பங்குச்சந்தைகளில் முதலீடு அதிகரித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையும் 26 விழுக்காடு சரிந்துள்ளது.

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: