முகப்பு /செய்தி /வணிகம் / பங்குச்சந்தை சரிவில் நிறைவடைய முக்கிய காரணம் என்ன?

பங்குச்சந்தை சரிவில் நிறைவடைய முக்கிய காரணம் என்ன?

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகளால், இன்று இந்திய பங்குச்சந்தைகள் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

பங்குச்சந்தைகள் தொடர்ந்து அதிகரித்ததைப் பயன்படுத்திக் கொண்டு, லாபத்தை பதிவு செய்ய, முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் இன்று இந்திய பங்குச்சந்தைகள் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 504 புள்ளிகள் சரிந்து 38,594 புள்ளிகளில் நிறைவடைந்தன. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 148 புள்ளிகள் சரிந்து 11,440 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை மற்றும் வாகன துறை பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. கார்ப்ரேட் வரி குறைக்கப்பட்டுள்ளதால், கார்களின் மீதான விலையை 5 அயிரம் ரூபாய் குறைப்பதாக மாருதி நிறுவனம் அறிவித்திருப்பது இன்றைய வாகன துறை பங்குகள் சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் தரத்தை சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமாக Morgan Stanley குறைத்துள்ளது. இதன் காரணமாக, இன்று ஒரே நாளில், பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் 7 சதவிதம் வரை சரிந்தன. இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இன்று ஒரு நாளில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு 22 ரூபாய்க்கு மேல் சரிந்தது.

சர்வதேச அளவில், பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், டிரம்ப் விவகாரமும் சர்வதேச மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

First published:

Tags: Sensex