• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உச்சத்தைத் தொட்ட இந்தியப் பங்குச்சந்தை- கெத்து காட்டிய டாடா மோட்டார்ஸ்..!

உச்சத்தைத் தொட்ட இந்தியப் பங்குச்சந்தை- கெத்து காட்டிய டாடா மோட்டார்ஸ்..!

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மஹிப்பு 70.86 ரூபாய் ஆக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று கடந்த மூன்று மாதங்களில் தொடாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 581.64 புள்ளிகள் அதிகரித்து 39,831.84 புள்ளிகளாக நின்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159. 70 புள்ளிகள் அதிகரித்து 11,786.85 புள்ளிகளாக நிறைவடைந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் வீழ்ந்துகிடந்த டாடா மோட்டார்ஸ் இன்றைய நாளின் உச்சபட்ச லாபத்தை அடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் 17 சதவிகித வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதனுடன் டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசூகி, டெக் மஹிந்திரா மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சராசரியாக 7.09 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

மற்றொருபுறம் பாரதி ஏர்டெல், கொட்டாக் வங்கி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 3.41 சதவிகித வீழ்ச்சியை அடைந்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மஹிப்பு 70.86 ரூபாய் ஆக உள்ளது.

மேலும் பார்க்க: ஜிபிஎஸ், வைஃபை, ஸ்பீக்கர் என அசத்தும் ஜியோமி ஸ்மார்ட்வாட்ச்..!

2019 குருபெயர்ச்சி பலன்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: