பங்குச்சந்தை இன்று கடும் சரிவு

சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, கச்சா எண்ணெய் உற்பத்தியில் நிலையற்ற தன்மை ஆகிய காரணங்களால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

பங்குச்சந்தை இன்று கடும் சரிவு
பங்குச்சந்தை
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2019, 8:08 PM IST
  • Share this:
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 185 புள்ளிகள் சரிந்து 10,817 புள்ளிகளில் வர்த்தகம் முடிவற்றது. இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 150 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது.


ஆக்சிஸ் வங்கி, HCL TECH, HDFC. ICICI, வங்கி மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, கச்சா எண்ணெய் உற்பத்தியில் நிலையற்ற தன்மை ஆகிய காரணங்களால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தன. நிஃபிடியின் துறை சார்ந்த அனைத்து குறியீட்டு எண்களுமே 1 சதவீதம் சரிவுடனயே வர்த்தகமாகின.

Also Watch : இஸ்ரோ சிவனின் கதை
First published: September 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்