SENSEX RISES OVER 400 POINTS AHEAD OF UNION BUDGET 2021 PRESENTATION ARU
Budget 2021 | மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக பங்குச்சந்தையில் ஏற்றம் - சாதகமான தொடக்கமா?
மத்திய பட்ஜெட் 2021
கடந்த வெள்ளியன்று வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 589 புள்ளிகள் குறைந்து 46,286 ஆகவும், நிஃப்டி 183 புள்ளிகள் குறைந்து 13,635 புள்ளிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் கண்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கூடிய மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இதனிடையே பொது முடக்கம் காரணமாக வீழ்ச்சியை சந்தித்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு, ஊக்கம் தரும் வகையில் பட்ஜெட் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு வணிகர்கள், சம்பளதாரர்கள், தொழிலதிபர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரிடையே ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் 4 நாட்களில் சென்ன்செக்ஸ் கிட்டத்தட்ட 2,400 புள்ளிகள் சரிந்தது. பட்ஜெட் மீதான அச்சத்தினால் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாக இச்சரிவு ஏற்பட்டதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் காரணமாக பங்குச்சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்று வர்த்தக தொடக்க நேரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டான சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது. தற்போது சென்செக்ஸ் 46,692 புள்ளிகளாக உள்ளது.
அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டான நிஃப்டி இன்று 127 புள்ளிகள் உயர்ந்து 13,750 ஐ கடந்தது.
தேசிய பங்குச்சந்தையில் இண்டஸ்இண்ட், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.63% உயர்ந்தன.
கடந்த வெள்ளியன்று வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 589 புள்ளிகள் குறைந்து 46,286 ஆகவும், நிஃப்டி 183 புள்ளிகள் குறைந்து 13,635 புள்ளிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.