பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தை உயர்வு!

இன்று சந்தை முடியும் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 212.74 புள்ளிகள் உயர்ந்து 36,469.43 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 62.70 புள்ளிகள் உயர்ந்து 10,893.65 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

news18
Updated: February 1, 2019, 5:06 PM IST

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பங்குச்சந்தை புள்ளிகள் உயர்ந்துள்ளன.

பட்ஜெட் 2019 சாமானியனுக்கானதாகவும், நடுத்தர மக்களுக்கானதாகவும் அமைந்துள்ளது. காப்ரேட்களுக்குப் பெரிய அளவில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று வர்த்தகத் துறையினர் கூறுகின்றனர்.

ஆனால் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 521 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகனது.

இன்று சந்தை முடியும் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 212.74 புள்ளிகள் உயர்ந்து 36,469.43 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 62.70 புள்ளிகள் உயர்ந்து 10,893.65 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையைப் பொறுத்தவரையில் ஆட்டோமொபைல், ரியாலிட்டி, ஐடி, ஆற்றல், டெக், டெலிகாம், தொழிற்சாலை, மின்சாரம், கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகள் லாபம் அளித்துள்ளன. மறுபக்கம் நிதி, வங்கி, மெட்டல் உள்ளிட்ட துறைகள் பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

லாபம் அளித்த டாப் 5 பங்குகள்

ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி, ஹெச்சில் டெக், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபினஸ்

நட்டம் அளித்த 5 பங்குகள்

வேதாந்தா, யெஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...