மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஜூன் 11-ம் தேதிக்கு பிறகு முதன் முறையாக 40,000 புள்ளிகளை கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்று காலை 9:30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 118.67 புள்ளிகள் என 0.30 சதவீதம் உயர்ந்து 40,026.07 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 32.15 புள்ளிகள் 0.27 சதவீதம் உயர்ந்து 11,977.95 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
டெலிகாம், ரியாலிட்டி, ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, நிதி, மின்சாரம், ஆற்றல், ஐ.டி. கட்டுமானம் உள்ளிட்ட பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 பைசா சரிந்து 68.79 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.33 சதவீதம் அதிகரித்து 63.82 டாலர் பேரல் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 1.90 சதவீதம் உயர்ந்து 57.34 டாலர் பேரல் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பட்ஜெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
மேலும் பார்க்க:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.