நாணய கொள்கை குறித்த அறிவிப்பு மீதான எதிர்பார்ப்பால் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

news18
Updated: February 7, 2019, 11:04 AM IST
நாணய கொள்கை குறித்த அறிவிப்பு மீதான எதிர்பார்ப்பால் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
மாதிரிப் படம்
news18
Updated: February 7, 2019, 11:04 AM IST
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் வாங்கி வருவது மற்றும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது.

காலை 10:47 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 119.16 புள்ளிகள் உயர்ந்து 37,093.39 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 29.15 புள்ளிகள் உயர்ந்து 11,091.60 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மெட்டல், பயன்பாடு உள்ளிட்ட துறை பங்குகள் மட்டும் அதிகளவில் விற்கப்பட்டு வருகிறன. மறுபக்கம் ஆட்டோமொபைல், டெலிகாம், தொழிற்சாலை, கட்டுமானம், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியாலிட்டி, மின்சாரம், நிதி, ஆற்றல், ஐடி என அனைத்துத் துறை பங்குகள் அதிகளவில் வாக்கப்பட்டு வருகின்றன.

பணவீக்கம் குறைவாக உள்ளதால் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும், பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் எனில் வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சன்பார்மா, பஜாஜ் ஆட்டோமொபைல், டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் அதிக லாபம் அளித்து வருகின்றன. மறுபக்கம் எச்டிஎஃப்சி, இண்டஸ் இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, வேதாந்தா, பஜாஜ் ஃபினான்ஸ் பங்குகள் நட்டத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பார்க்க: கேபிள், டிடிஎச் புதிய கட்டணம்... மக்களே இனி எஜமானர்!
First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...