வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை... 12 ஆயிரம் புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி!

மாதிரிப்படம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.69 ரூபாய் ஆக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வரலாறு காணாத உச்சமாக சுமார் 500 புள்ளிகள் அதிகரித்து பங்குச்சந்தை சென்செக்ஸ் 40,889.23 புள்ளிகளாக நின்றது.

    உலோகம், வங்கித்துறை, டெலிகாம் பங்குகள் ஆகியன சர்வதேச அளவில் நல்ல உயர்வு பெற்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 529.82 புள்ளிகள் அதிகரித்து 40,889.23 புள்ளிகளாக நின்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159.35 புள்ளிகள் உயர்ந்து 12,073.75 புள்ளிகளாக நின்றது.

    இன்றைய வர்த்தகத்தில் பாரதி ஏர்டெல் அதிக லாபம் ஈட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து டாடா ஸ்டீல், வேதாந்தா, இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி, மாருதி, ஹீரோ மோட்டார்கார்ப் மற்றும் கோட்டாக் வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபம் பெற்றன.

    யெஸ் வங்கி, ஓஎன்ஜிசி, ஐடிசி, என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை மட்டுமல்லாது ஷாங்காய், ஹாங்கா, சியோல் மற்றும் டோக்யோ பங்கு வர்த்தகங்களும் நல்ல உச்சத்தைப் பெற்றுள்ளன.

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.69 ரூபாய் ஆக உள்ளது.

    மேலும் பார்க்க: வற்புறுத்தி கொடுக்கப்படும் வி.ஆர்.எஸ்... போராட்டத்துக்குத் தயாராகும் BSNL ஊழியர்கள்!
    Published by:Rahini M
    First published: