வட்டி விகிதம் மாற்றப்படாததால் மும்பை பங்குசந்தை குறியீட்டெண் புதிய உச்சம்..!

கோப்புப் படம்

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதாரம் 7.5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

  இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை 4 சதவீதமாக நீடிக்கச் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

  ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்துள்ள வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை மூன்று புள்ளி மூன்று ஐந்து சதவீதமாக தொடரச் செய்யவும் முடிவுசெய்யப்பட்டது.

  பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டு வரை வட்டி விகித்தை அதிகரிக்காமல் இருக்கச் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

  மேலும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். பல்வேறு துறைகளும் வளர்ச்சிப் பாதைக்கு சென்றுகொண்டிருப்பதால், பொருளாதாரம் மீண்டுவருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

  மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம் புள்ளி ஒரு சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் பூஜ்யம் புள்ளி 7 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதாரம் 7.5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.

  Also read... கூகுள் மேப்ஸ் & சர்ச் செயலியின் புதிய அப்டேட்: வணிக உரிமையாளர்களுடன் இனி பயனர்கள் சாட் செய்யலாம்!
  வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.


  சென்செக்ஸ் முதல்முறையாக 45,000 புள்ளிகளைக் கடந்தது. வர்த்தக நிறைவில் 494 புள்ளிகள் உயர்ந்து 45 ஆயிரத்து 148 புள்ளிகளாக இருந்தது. இதேபோல, நிஃப்டி 124 புள்ளிகள் உயர்ந்து 13,258 புள்ளிகளாக இருந்தது.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: