சென்செக்ஸ் 181 புள்ளிகளும், நிப்டி 10,727 புள்ளியாகவும் உயர்வு!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 0.33 சதவீதம் உயர்ந்து 69.95 ரூபாயாக உள்ளது.

news18
Updated: January 4, 2019, 4:25 PM IST
சென்செக்ஸ் 181 புள்ளிகளும், நிப்டி 10,727 புள்ளியாகவும் உயர்வு!
கோப்புப் படம்.
news18
Updated: January 4, 2019, 4:25 PM IST
ஆட்டோமொபைல், மெட்டல் துறை பங்குகள் தலைமையில் இன்று இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் லாபத்துடன் சந்தையை முடித்துக்கொண்டன.

சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 181.89 புள்ளிகள் உயர்ந்து 35,695.10 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 55.10 புள்ளிகள் உயர்ந்து 10,727.35 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் டெலிகாம், மெட்டல், நிதி, மின்சாரம், வங்கி, கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆற்றல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகள் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டன. மறு பக்கம் டெக், ஐடி துறை பங்குகள் சரிவடைந்தன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 0.33 சதவீதம் உயர்ந்து 69.95 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஐடி நிறுவனப் பங்குகள் சரிவுக்கு இதுவும் ஒரு காரணம்.

கார்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வர உள்ளதால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

லாபம் ஈட்டிய டாப் 5 பங்குகள்


யெஸ் வங்கி, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, எஸ்பிஐ
Loading...

நஷ்டம் அளித்த டாப் 5 பங்குகள்


ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், இன்போசிஸ், இன்டஸ் இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப்

கச்சா எண்ணெய் விலை நிலவரம்


சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.86 சதவீதம் உயர்ந்து பேரல் 55.95 டாலருக்கும், WTI கச்சா எண்ணெய் விலை 1.17 சதவீதம் உயர்ந்து 47.09 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: ஜெ.மரணம்: ராதாகிருஷ்ணன் மீது குற்றம்சாட்டும் நோக்கமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...