சென்செக்ஸ் 185 புள்ளிகளும், நிஃப்டி 10,877 புள்ளியாகவும் சரிவு!

இன்று (1/02/2019) காலை 10:30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 195.48 புள்ளிகள் என 0.53 சதவீதம் சரிந்து 36,351 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 69.40 புள்ளிகள் என 0.63 சதவீதம் சரிந்து 10,874.20 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

news18
Updated: February 11, 2019, 11:39 AM IST
சென்செக்ஸ் 185 புள்ளிகளும், நிஃப்டி 10,877 புள்ளியாகவும் சரிவு!
மாதிரிப் படம்
news18
Updated: February 11, 2019, 11:39 AM IST
ஆசிய சந்தையில் உள்ள மோசமான நிலை, அமெரிக்கா - சீனா இடையில் தொடரும் வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

இன்று (1/02/2019) காலை 10:30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 195.48 புள்ளிகள் என 0.53 சதவீதம் சரிந்து 36,351 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 69.40 புள்ளிகள் என 0.63 சதவீதம் சரிந்து 10,874.20 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் ஐடி, டெக் துறை பங்குகள் மட்டும் லாபத்துடன் வர்த்தகம் செய்து வருகின்றன. டெலிகாம், வங்கி, நிதி, ரியாலிட்டி, ஆட்டோமொபைல், எனர்ஜி, மின்சாரம், மெட்டல், கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறையின் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன.

இன்ஃபோசிஸ், கோடாக் வங்கி, டிசிஎஸ், எச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி மற்றும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. மறுபக்கம் ஓஎன்ஜிசி, வேதாந்தா, மஹிந்தரா & மஹிந்தரா, எல்&டி, ஹீரோ மோட்டோ கார்ப்பு உள்ளிட்ட பங்குகள் நட்டத்துடன் வர்த்தகம் செய்து வருகின்றன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் சிலை 0.76 சதவீதம் உயர்ந்து பேரல் 62.10 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 0.15 சதவீதம் உயர்ந்து 52.72 டாலர் எனவும் விற்பனை செய்து வருகிறது.

மேலும் பார்க்க: வராத தண்ணீருக்கு வரியா?
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...