பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதால் பங்குச்சந்தை புதிய உச்சத்துடன் முடிந்தது!
பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதால் பங்குச்சந்தை புதிய உச்சத்துடன் முடிந்தது!
மாதிரிப் படம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 329.92 புள்ளிகள் உயர்ந்து 39,831.97 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 84.80 புள்ளிகள் உயர்ந்து 11,945.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
நரேந்திர மோடி இன்று 2-வது முறையாக பிரதமராகப் பதவியேற்க உள்ளார். இவரது ஆட்சியில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் போன்றவை அதிகளவில் ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று பங்குச்சந்தை குறியீடுகள் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 329.92 புள்ளிகள் உயர்ந்து 39,831.97 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 84.80 புள்ளிகள் உயர்ந்து 11,945.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் மின்சாரம், டெலிகாம் நிதி, ஆற்றல், ஐ.டி. துறை சார்ந்த பங்குகள் லாபத்துடனும், ரியாலிட்டி, மெட்டல், ஆட்டோமொபல் பங்குகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டன.
ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69.83 ரூபாயிலிருந்து 6 பைசா அதிகரித்து 69.89 டாலராக உள்ளது.
சன் பார்மா, மஹிந்தரா & மஹிந்தரா, இண்டஸ் இண்ட் வங்கி, வேதாந்தா, ஓஎன்ஜிசி.
கச்சா எண்ணெய்:
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.95 சதவீதம் குறைந்து பேரல் 69.45 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 0.56 சதவீதம் குறைந்து 58.91 டாலர் பேரல் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.