• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தொடர் வீழ்ச்சியில் பங்குச்சந்தை வர்த்தகம்... மோசமான நிலையில் இந்தியப் பொருளாதாரம்!

தொடர் வீழ்ச்சியில் பங்குச்சந்தை வர்த்தகம்... மோசமான நிலையில் இந்தியப் பொருளாதாரம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தாமஸ் குக், வேர்ல்ஃபூல் இந்தியா, நிப்பான், ஈடில்வைஸ், பிரமால் என்டெர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
உள்நாட்டு பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து மூன்றாம் நாளாகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னையின் தாக்கம் இன்றைய வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளதாக வணிக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றைய வர்த்தகம் பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 361.92 புள்ளிகள் வீழ்ந்து 38,3015.41 புள்ளிகளாக நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114.55 புள்ளிகள் வீழ்ந்து 11,359.90 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவு பெற்றது. கூட்டுறவு வங்கிகளில் நிலவும் மோசமான மேலாண்மை காரணமாக வங்கி வர்த்தகத் தளத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தையைப் பொறுத்தவரையில் யெஸ் வங்கி, ஜீ என்டெர்டெயின்மென்ட், கரூர் வைசியா வங்கி, அப்போலோ டயர்ஸ், இந்தியன் வங்கி, எஸ்பிஐ, ஐடிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.

தாமஸ் குக், வேர்ல்ஃபூல் இந்தியா, நிப்பான், ஈடில்வைஸ், பிரமால் என்டெர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.12 ரூபாய் ஆக உள்ளது.

மேலும் பார்க்க: கடன் வழங்கும் தொழிலில் இருந்து விலகும் ரிலையன்ஸ் கேப்பிடல்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: