முகப்பு /செய்தி /வணிகம் / 600 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ்! அதள பாதாளத்தில் ஆட்டோமொபைல் ஷேர்கள்

600 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ்! அதள பாதாளத்தில் ஆட்டோமொபைல் ஷேர்கள்

பங்குச்சந்தை (கோப்புப் படம்)

பங்குச்சந்தை (கோப்புப் படம்)

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 71 ரூபாய் ஆக உள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சியில் நிறைவுபெற்றது. HDFC, HDFC வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, லார்சன் டர்போ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகப்படியான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

சென்செக்ஸ் 611 புள்ளிகள் வரை வீழ்ந்தும் நிஃப்டி 10,950 புள்ளிகளுக்குக் கீழ் வீழ்ந்தும் நிறைவடைந்துள்ளது. சீனா- அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர், ஹாங்காங் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வந்துள்ளன.

இன்று மதியம் 2.58 மணிக்கு, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 565 புள்ளிகள் வீழ்ந்து 37,017 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச்சந்தை எண் நிஃப்டி 166 புள்ளிகள் வீழ்ந்து 10,944 புள்ளிகளாகவும் உள்ளது. இதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 71 ரூபாய் ஆக உள்ளது.

அதிகப்படியான வீழ்ச்சியை இந்திய ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின் அடிப்படையில் பேசஞ்சர் கார்களின் விற்பனை 30.9 சதவிகித வீழ்ச்சியையும் கமர்ஷியல் கார்களின் விற்பனை 25.7 சதவிகித வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன.

மேலும் பார்க்க: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் பெரும் பலனளிக்கும் ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி!

First published:

Tags: Sensex