ஏற்கனவே சரிவில் இருந்த பங்குச்சந்தை ஜம்மு காஷ்மீர் பிரிவால் மொத்தமாக சரிந்தது!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 77 பைசாக்கள் வீழ்ந்து 70.37 ரூபாய் ஆக உள்ளது.

Web Desk | news18
Updated: August 5, 2019, 3:41 PM IST
ஏற்கனவே சரிவில் இருந்த பங்குச்சந்தை ஜம்மு காஷ்மீர் பிரிவால் மொத்தமாக சரிந்தது!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 5, 2019, 3:41 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதால் இந்தியப் பங்குச்சந்தை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தொடர்ந்து பங்குச்சந்தைகள் சரிவிலேயே இருக்கிறது. இன்று காலையிலேயே ஜம்மு காஷ்மீர் விவகாரம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியதால் வாரத்தின் முதல் நாளான இன்று சுமார் 650 புள்ளிகள் வீழ்ந்து வீழ்ச்சியிலே பங்கு வர்த்தகம் தொடங்கியது. மேலும் காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாது அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப் போரின் காரணமாகவும் ஆசிய சந்தைகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வர்த்தகப் போரால் சீனாவின் கரன்ஸியான யுவான் மதிப்பும் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 77 பைசாக்கள் வீழ்ந்து 70.37 ரூபாய் ஆக உள்ளது. மதியம் 3 மணி அளவில் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 446.73 புள்ளிகள் வீழ்ந்து 36,671.49 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 142.05 புள்ளிகள் வீழ்ந்து 10,855.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.


பங்குச்சந்தை வீழ்ச்சியால் யெஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், பவர் க்ரிட், ஐசிஐசிஐ வங்கி, ஓஎஞிசி, ரிலையன்ஸ் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. ஆனபோதும், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார்கார்ப், ஹெச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா, பாரதி ஏர்டெல் மற்றும் ஹெச் சி எல் ஆகிய நிறுவனங்கள் லாபகர வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் பார்க்க: ஜம்மு காஷ்மீர் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது இந்திய அரசு - ஓமர் அப்துல்லா
First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...