ஏற்றம் கண்டுவந்த மும்பை பங்குச்சந்தை இன்று 1,102 புள்ளிகளை இழந்தது

ஏற்றம் கண்டுவந்த மும்பை பங்குச்சந்தை இன்று 1,102 புள்ளிகளை இழந்தது

பங்குச்சந்தை (கோப்புப் படம்)

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த சில நாட்ளாக ஏற்றம் கண்டுவந்த மும்பை பங்குச்சந்தை இன்று 1000 புள்ளிகளை இழந்தது.

 • Share this:
  கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த சில நாட்ளாக ஏற்றம் கண்டுவந்த மும்பை பங்குச்சந்தை இன்று 1000 புள்ளிகளை இழந்தது.

  வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,102 புள்ளிகள் சரிந்து 32,436 புள்ளிகளில் வர்த்தகமானது.

  இதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 357 புள்ளிகள் இழந்து 9,544.புள்ளிகளில் வர்த்தகமானது. அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார மீட்சியில் தாமதம் ஏற்படக் கூடும் என்ற காரணம் ஆசிய பங்குச்சந்தை உள்பட சர்வதேச அளவிலான பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Also read... பல வகைகளில் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த முகக்கவசங்கள்: விதிமுறைகளை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  Published by:Vinothini Aandisamy
  First published: