ஹோம் /நியூஸ் /வணிகம் /

வயசான பிறகு வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் வருமானம்: இப்படியொரு சேமிப்பு திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

வயசான பிறகு வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் வருமானம்: இப்படியொரு சேமிப்பு திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

SBI வங்கியின் நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்களை விடவும் இது அதிகமாகவும் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வயசான பிறகு நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறந்த சேமிப்பு திட்டத்தை தேடி கொண்டிருக்கிறீர்களா? இதோ இந்த பதிவு உங்களுக்கு தான்.

  ஒருபக்கம் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி உயர்த்தப்பட்டாலும் பலரும் சமீபகாலமாக போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். உத்தரவாதமான வருமானத்தைத் தேடும் மூத்த குடிமக்களுக்கும் போஸ்ட் ஆபீஸ் மிகச் சரியான தேர்வு. நீங்கள் தாராளமாக போஸ்ட் ஆபீஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். சேமிக்கவும் தொடங்கலாம். ஆனால் அதற்கு முன்பு அதில் கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். போஸ்ட் ஆபிஸில் இருக்கும் (SCSS) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் வருடத்திற்கு 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது-

  ஏற்கெனவே கட்டிய வீட்டை வாங்கப் போறீங்களா? ஏமாறாமல் இருக்க இதையெல்லாம் செக் பண்ணுங்க!

  SBI வங்கியின் நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்களை விடவும் இது அதிகமாகவும் உள்ளது. SCSS திட்டமானது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட , ஆபத்து இல்லாத அஞ்சல் அலுவலகத் திட்டமாகும். இது ஓய்வு பெற்றவர்களுக்கு உத்தரவாதமான வருவாயை வழங்குகிறது, மேலும் SCSS ல் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ 1 லட்சத்திற்கு மேல்  ஆபத்து இல்லாத வருமானத்தை பெற முடியும். எப்படி தெரியுமா?

  நாளை முதல் வரும் அதிரடி மாற்றம்..கிரெடிட், டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவும்!

  60 வயதுக்கு மேற்பட்ட நபர், ரூ 1000 முதல் அதிகபட்சம் ரூ 15 லட்சம் வரை இந்த கணக்கில் வைப்பு தொகையாக செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்த முதலீடு திட்டமானது 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்துடன் வருகிறது.  SCSSன் வட்டி விகிதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலீடு தொகைக்கு வழங்கப்படும். சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட வட்டியின் படி SCSS திட்டத்தின் வட்டி 7.6% ஆகும்.

  ஒருவர் இந்த திட்டத்தில் ரூ. 15  லட்சம் டெபாசிட் செய்கிறார் என்றார் அவரின் காலாண்டு வட்டி தொகை ரூ 27,000 மேல் கணக்கிடப்படும்.

  அப்படியென்றால் அவரின் வருடாந்திர வட்டித் தொகை ரூ 1,11,000 ஐ தாண்டும். எனவே முதிர்வு நேரத்தில், கணக்கு வைத்திருப்பவர் மொத்த வட்டித் தொகை 5 லட்சத்தை தாண்டி அசல் உட்பட மொத்த முதிர்வுத் தொகை ரூ 20,55,000 மேல் கணக்கிடப்படும். SCSSல் வட்டித் தொகையானது காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும். எனவே போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டத்தில் வட்டி மட்டுமே  1 லட்சத்திற்கு மேல் ஆண்டுக்கு வருமானமாக கிடைக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Pension Plan, Savings