ஹோம் /நியூஸ் /வணிகம் /

சீனியர் சிட்டிசன்களுக்கான அசத்தல் சேமிப்புத் திட்டம்! இதில் தான் வட்டி அதிகம் கிடைக்கும்

சீனியர் சிட்டிசன்களுக்கான அசத்தல் சேமிப்புத் திட்டம்! இதில் தான் வட்டி அதிகம் கிடைக்கும்

மூத்த குடிமக்கள் சேமிப்பு

மூத்த குடிமக்கள் சேமிப்பு

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் (SCSS) மற்றும் பிஎம் வய வந்தனா யோஜனா (PMVYY) சிறந்த முதலீட்டுத்திட்டங்களாக உள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இளம் வயதில் நாம் சம்பாதிக்கும் பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மற்றும் சில ஆடம்பர விஷயங்களுக்காகப் பயன்படுத்துகிறோம். அதே சமயம் வயதானக் காலத்தில் வருமானம் இல்லாத நிலையில் நாம் என்ன செய்வோம்? என்பதை மறந்து விடுகிறோம். வயதானவர்களுக்கு பணம் இல்லை என்றால் அவர்களின் தன்னம்பிக்கையே முற்றிலும் இழந்தது போன்ற மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

  எனவே இதுபோன்ற நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், ஏதாவது சேமிப்புத்திட்டத்தில் முதலீடு செய்வது என்பது அத்தியாவசியமானது. மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் மற்றும் பிஎம் வய வந்தனா யோஜனா என்ற இரண்டு சேமிப்புத் திட்டங்கள் 7.4 சதவீத வட்டியுடன் பணத்தைப் பெறுவதற்கு உதவுகிறது. இந்நிலையில்என்னென்ன அம்சங்கள் இதில் உள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

  PM kisan: ரூ. 2000 பெறும் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? செக் செய்வது ரொம்ப சுலபம்!

  வயதானக் காலத்தில் மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் சேமிப்புத்திட்டங்கள்:

  வயதானக் காலத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஏதாவது நிலையான வருமானம் வரக்கூடிய சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் (SCSS) மற்றும் பிஎம் வய வந்தனா யோஜனா (PMVYY) சிறந்த முதலீட்டுத்திட்டங்களாக இருக்கும்.

  முதலில் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் குறித்து அறிந்துக் கொள்வோம். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் 10 முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதந்தோறும் ரூபாய் 18,500 ஓய்வூதியமாக பெற முடியும். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் மானியத்துடன் கூடிய பென்சன் திட்டத்தை வழங்குகிறது. எனவே 60 வயதானவர்கள் யாராக இருந்தாலும் மார்ச் 31, 2023 க்குள் முதலீடு செய்துக் கொள்ளலாம். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. இந்த பணத்தை காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை உங்களுக்கான பென்சன் வழங்கப்படும். இந்த திட்டத்தில் குறைந்தப்பட்சமாக மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் செலுத்தினால் ரூ. 9250 வரை பென்சன் பெற முடியும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது.

  இதேபோன்று தான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டத்திலும் நீங்கள் பணத்தைப் பெற முடியும். உதாரணமாக நீங்கள் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் மற்றும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு 60 லட்சம் வரை முதலீடு செய்துள்ளீர்கள் என்றால் 7.4 சதவீத வட்டியுடன் உங்களுக்கு கிடைக்கும் பணத்தின் விபரம் இதோ..

  1 லட்சம் பென்சன் வேண்டுமா? உங்களுக்காகவே எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

  மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டத்தில் கணவருக்கு ரூ.1.11 லட்சம் மற்றும் மனைவிக்கு ரூ.1.11 லட்சம் வட்டி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கப்பெறும். இதேபோன்று தான் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்திலும் கிடைக்கும். எனவே இதன் மூலம் நீங்கள் மாதத்திற்கு ரூ. 36 ஆயிரம் முதல் ரூ 37 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும். நிச்சயம் இன்றைய காலக்கட்டத்தில் போதுமான பணமாக இருக்காது. இருந்த பொதும் ஓய்விற்கு பிறகு யாருடைய கையையும் எதிர்ப்பார்க்காமல் இருக்கலாம். எனவே இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி வயதான காலத்தில் நிம்மதியுடன், தன்னம்பிக்கையுடன் வாழலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Investment, Money, Savings