ஹோம் /நியூஸ் /வணிகம் /

வயசாயிடுச்சு முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

வயசாயிடுச்சு முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

முதலீடு

முதலீடு

மூத்த குடிமக்கள் பாதுகாப்பாக எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சேமிப்பு முதலீடு என்பது இளைஞர்கள், நடுத்தர வயதினருக்கானது மட்டும் அல்ல. மூத்த குடிமக்கள்  வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர்களுக்கும் நிரந்தரமான நிலையான வருமானம் அளிப்பதற்கு பல விதமான முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றது. இளையவர்கள் ரிஸ்க் அதிகம் உள்ள இடங்களில் பணத்தை முதலீடு செய்வார்கள். அதேபோல பெரும்பாலான முதியவர்களால் முடியாது என்ற சூழலில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பாக எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

  முதியவர்களுக்காகவே, மூத்த குடுமக்கள் சேமிப்பு திட்டம் என்ற இந்த திட்டத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. பணி ஓய்வு பெறுபவர்கள் மத்தியில் இந்த திட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. 60 வயதுக்கு மேற்பட்ட யாராக இருந்தாலுமே இந்த திட்டத்தில் தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்யலாம். 60 வயதுக்கு முன்பாகவே பணி ஓய்வு பெற்றிருந்தால், 55 வயதுக்கு மேல், பணி ஓய்வு பெற்ற பின்னர், கிடைத்த தொகையை ஒரு மாதத்திற்குள் இதில் முதலீடு செய்யலாம். ஐந்து ஆண்டு கால திட்டத்தில், குறைந்த பட்சமாக 1000 ரூபாயும், அதிகமாக 15 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுக்கு 7.4 % வட்டி வழங்கப்படுகிறது மற்றும் வருமான வரி விலக்கு பெறலாம்.

  Mutual funds : கொரோனாவுக்கு பின் மாறிய நிலைமை.. முதலீட்டாளர்களை ஈர்த்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்!

  பிரதம மந்திரி வயா வந்தனா யோஜனா

  2017 ஆம் ஆண்டு, பிரதம மந்திரி வயா வந்தனா யோஜனா முதலீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பணி ஓய்வு பெற்றவர்களும் மூத்த குடிமக்களும் நிரந்தர வருமானம் பெறுவதற்காக முதலீடு செய்யலாம். இதில் சேர்வதற்கு 60 வயது நிரம்பி இருக்க வேண்டும். இது நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகள் முதலீடு செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்த பட்சமாக 1.56 லட்சமும், அதிகபட்சமாக 15 லட்சமும் முதலீடு செய்யலாம்.

  வங்கி ஃபிக்சட் டெபாசிட்

  மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று மற்றும் நிலையான வருமானம் என்று வரும்பொழுது பெரும்பாலானவர்கள் தேர்வு செய்வது வங்கிகள் வழங்கும் வைப்பு நிதி கணக்குகளைத் தான். சாதாரண நபர்களை விட மூத்த குடிமக்களுக்கு அரை சதவீதம் முதல் 1.5% வரை வங்கிகள் கூடுதலான வட்டியை வழங்குகிறது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த பாலிசி திட்டத்தின் அடிப்படையில் மற்றும் ஒவ்வொரு வங்கியும் மூத்த குடிமக்களின் வைப்பு நிதிக்கான வட்டியை நிர்ணயிக்கிறது. பெரும்பாலான வங்கிகள் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வட்டி யை த்தான் வழங்குகிறது. ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கில் நீங்கள் செலுத்தும் தொகை மற்றும் எவ்வளவு காலம் நீங்கள் டெபாசிட் செய்ய போகிறீர்கள் என்ற இரண்டின் அடிப்படையில் உங்களுக்கான வட்டி விகிதம் மாறும்.

  வங்கிகள் வழங்கும் சிறப்பு டெர்ம் டெபாசிட்

  ஒரு சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்காகவே சிறப்பான டெர்ம் டெபாசிட் என்ற குறிப்பிட்ட கால அளவுள்ள முதலீடு விருப்பங்களை வழங்கி வருகிறது. இது முழுக்க முழுக்க ஓய்வு பெற்ற முதியவர்களுக்கான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டமாக வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.

  வழக்கமாக வைப்பு நிதிகளுக்கு வழங்கப்படும் வட்டி விகித்தை விட கொஞ்சம் அதிகமாக இந்த சிறப்பு டெர்ம் டெபாசிட் கணக்கில் வழங்கப்படுகிறது.

  3 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இடம் உண்டா?

  ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் விகிதம் கொண்ட சேமிப்பு பத்திரங்கள்

  அரசாங்கம் மற்றும் பொது நிறுவனங்கள் அவ்வப்போது பங்குகள், பத்திரங்கள் ஆகியவற்றை வெளியிட்டு பணத்தை திரட்டும். மூத்த குடிமக்களுக்காக ரிசர்வ் வங்கி அத்தகைய முதலீடு திட்டத்தை சேமிப்பு பத்திரங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறது. ஃப்ளோட்டிங் விகிதம் கொண்ட சேமிப்பு பத்திரங்களில் நீங்கள் குறைந்தபட்சம் ₹1000 முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுக்கு 7.15% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்துக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் விதிகளுக்கு ஏற்ப உங்களுக்கு வழங்கப்படும் வட்டியின் விகிதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும்.

  அஞ்சலக சேமிப்புத் திட்டம்

  மிகவும் பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு தனி இடம் இருக்கிறது. நீங்கள் இதில் குறைந்தபட்சம் ₹1000 முதல் அதிகபட்சமாக நான்கரை லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு வருடத்திற்கு 6.6% என்ற அடிப்படையில் மாத வருமானம் கிடைக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Money, Post Office, Savings