செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த திட்டத்தில் கொட்டி கிடைக்கும் நன்மைகளும் சலுகைகளும் தான். உலக மகளிர் தினமான இன்று பெண்களுக்கான சேமிப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, ஹோம் மேக்கர்ஸாக இருந்தாலும் சரி வருங்காலத்திற்காக சேமிப்பு என்பது மிக மிக அவசியம். அதிலும் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பலரும் இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொண்டால் அவசியம் உதவும்.
இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்வதற்கு உங்களுக்கு முக்கியமான தகுதிகளில் பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக் கூடாது. அதாவது, குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரே ஒரு
பெண் குழந்தை உள்ள பெற்றோருக்கு மட்டுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரி விலக்கு நன்மைகளும் உண்டு. நீங்கள் மாதம் ரூ. 2500 இந்த திட்டத்தில் சேமித்து வந்தால் முதலீடு முதிர்வடையும் போது ரூ.12,00,000 வரை கிடைக்கும்.
இதையும் படிங்க.. LIC திட்டத்தில் வந்துள்ள முக்கியமான மாற்றம் என்ன? முதலீட்டாளர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள்
* குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
* பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரி சான்றுக்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பயன்பாட்டு பில் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று
* பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளச் சான்றுக்கு பான், வாக்காளர் அட்டை, ஆதார் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று
* குறைந்தபட்சம் ரூ. 250 அல்லது நீங்கள் விரும்பும் தொகைக்கு காசோலை அல்லது வரைவோலை
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை திறப்பது எப்படி?
பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக தபால் அலுவலகம் அல்லது இந்த திட்டம் வழங்கப்படும் வங்கிகளில் கணக்கைத் துவங்கலாம். வங்கி அல்லது தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1என்ற படிவத்தை நிரப்ப வேண்டும்.
இதையும் படிங்க.. PM-Kisan: வருஷத்துக்கு ரூ. 6000 கிடைக்கனும்னா இதை கட்டாயம் செய்யனும்!
SSA 1 படிவத்தில் குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் KYC தகவல் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். குழந்தை மற்றும் பெற்றோர்களின் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன், நிரப்பிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களையும் சரி பார்த்த பின்பு,
வங்கி அல்லது தபால்நிலையம் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்யும். அதுமட்டுமின்றி கணக்கிற்கான பாஸ்புக் கிடைக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.