பெண் குழந்தைகளின் முன்னேற்றம், அடிப்படை கல்வி மட்டுமல்லாமல் உயர்கல்வி, மற்றும் எதிர்கால பாதுகாப்புக்காக பெற்றோர்கள் குழந்தைகளின் இளம் வயதிலேயே சேமிக்கத் தொடங்கி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல பல விதமான சேமிப்பு மற்றும் நீண்ட கால முதலீடு திட்டங்களும் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது சுகன்யா சம்ரிதி யோஜனா என்று கூறப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும். அரசாங்கம் வழங்கும் இந்த சிறுசேமிப்புத் திட்டத்தில் மற்ற திட்டங்களை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது. உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால், குழந்தையின் எதிர்காலத்துக்கு இந்த சேமிப்பு திட்டம் எவ்வாறு பலன் தரும் என்று இங்கே பார்க்கலாம்.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசாங்கம் வழங்கும் சிறு சேமிப்புத் திட்டம்
எல்லாராலும் பெரிய தொகையை சேமிப்பாகவோ, முதலீடாகவோ செலுத்த முடியாது. மாதா மாதம் சிறிய தொகையை சேமிக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்து, இதை ஊக்குவித்தும் வருகின்றது.
இந்த சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது மிகப்பெரிய தொகை அவர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம், குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக கணக்கில் சேரலாம். தபால் அலுவலகம் அல்லது இந்த திட்டம் வழங்கப்படும் வங்கிகளில் கணக்கைத் துவங்கலாம்.
சுகன்யா சம்ரித்தி கணக்கை திறப்பதற்கான மற்றும் கணக்கில் பணம் செலுத்துவதற்கான விதிமுறைகள்
வங்கி அல்லது தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1 என்ற படிவத்தை நிரப்பி நிறுத்த வேண்டும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை திறப்பது எப்படி
பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக தபால் அலுவலகம் அல்லது இந்த திட்டம் வழங்கப்படும் வங்கிகளில் கணக்கைத் துவங்கலாம்
வங்கி அல்லது தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1 என்ற படிவத்தை நிரப்பி நிறுத்த வேண்டும்.
SSA 1 படிவத்தில் குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் KYC தகவல் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
குழந்தை மற்றும் பெற்றோர்களின் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன், நிரப்பிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களையும் சரி பார்த்த பின்பு, வங்கி அல்லது தபால்நிலையம் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்யும். அதுமட்டுமின்றி கணக்கிற்கான பாஸ்புக் கிடைக்கும்.
Read More : உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம்!
மாதம் ரூ.1000 செலுத்தினால், 15 லட்ச ரூபாய் கிடைக்கும்
குறைந்தபட்சம் ரூ. 250 அல்லது நீங்கள் விரும்பும் தொகைக்கு காசோலை அல்லது வரைவோலை செலுத்தி, கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சமாக ஓராண்டில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சிறு சேமிப்பு திட்டம் என்பதால் மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
ஓராண்டுக்கு மொத்தமாகவும் செலுத்தலாம். கணக்கில் பணம் சரியாக முதலீடி செய்யவில்லை என்றால், ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். முழுவதுமாக, முதிர்வு காலம் வரை பணம் செலுத்த முடியவில்லை என்றால் கூட, முதிர்வு அடைந்த பிறகு, அபராதம் செலுத்தி கட்டிய பணத்தை திரும்பப் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் அதிக பட்ச முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.1000 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ.5.70 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தில் வரி விலக்கு நன்மைகளும் உண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Savings, Selvamagal Scheme