ஹோம் /நியூஸ் /வணிகம் /

நன்மைகளை அள்ளி தரும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் சந்தேகங்களும் பதில்களும்!

நன்மைகளை அள்ளி தரும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் சந்தேகங்களும் பதில்களும்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பலருக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விடை இதோ.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பெண் குழந்தைகளுக்காகவே மிகச் சிறந்த சேமிப்பு திட்டமாக இருக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் குறித்த கேள்விகளும் அதற்கான பதில்களும்.

1. கேள்வி: செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் வயது வரம்பு?

பதில் : உங்களது குழந்தைக்கு 10 வயதுக்கு மேல் உள்ளது எனில், அவர்களின் பெயரிலேயே தொடங்கிக் கொள்ள முடியும். இதே குழந்தைக்கு 10 வயதுக்கு குறைவாக இருந்தால், ஜாய்ண்ட் அக்கவுண்ட் மூலம் தொடங்கலாம்.

2. கேள்வி : செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வருமான வரிச்சலுகை உண்டா?

பதில் : உண்டு. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. மேலும் நீங்கள் இந்த கணக்கு தொடங்கியதில் இருந்து 7வது ஆண்டில் இருந்து கணிசமான தொகையினை பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு.

3. கேள்வி : யாரெல்லாம் இந்த திட்டத்தை தொடங்கலாம்?

பதில் : பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது குழந்தையின் அதிகாரப்பூர்வ பாதுகாவலர் அந்த குழந்தையின் பெயரிலே இந்த திட்டத்தில் கணக்கை தொடங்கலாம்.

4. கேள்வி : இந்த திட்டத்தின் பயனர் இறந்தால் என்ன நடக்கும்?

பதில் : கணக்கு தொடங்கப்பட்ட குழந்தை எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால், உடனே செல்வ மகள் செமிப்பு திட்டத்தின் கணக்கு மூடப்பட்டு அதில் இருக்கும் பணம் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படும்.

5. கேள்வி: குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இறந்து விட்டால் என்ன நடக்கும்?

பதில் : இந்த சமயத்தில் குழந்தையால் மாதம் மாதம் பணத்தை கட்ட முடியாது என்பதால் கணக்கு மூடப்பட்டு மீதி இருக்கும் பணம் குடும்பத்தினரிடமோ அல்லது அந்த குழந்தையிடமோ ஒப்படைக்கப்படும். ஒருவேளை தொடர்ந்து அந்த கணக்கில் மாதம் மாதம் முதலீடு செய்யப்பட்டால் 21 வயது கழித்து அந்த பெண் குழந்தையிடமே முதிர்வு தொகை வழங்கப்படும்.

6. சாதாரண சேமிப்பு கணக்கை செல்வ மகள் சேமிப்பு கணக்காக மாற்ற முடியுமா?

பதில் : முடியாது. இப்போது அதுபோன்ற வசதி செயல்பாட்டில் இல்லை. இது பெண் குழந்தைகளுக்காகவே மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இதில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அஞ்சலகம் அல்லது வங்கியில் அதற்கான கணக்கை தனியாக தொடங்க வேண்டும்.

7. மெச்சூரிட்டி காலம் முடிவதற்குள் பணத்தை இடையில் எடுக்க முடியுமா?

பதில் : முடியாது. குறைந்தது 50% கட்டி இருக்க வேண்டும்.அப்போதும் அந்த பெண் குழந்தை குறைந்தது 18 வயது நிரம்பி இருந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இந்த திட்டம் பெண் குழந்தையின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவுக்கு உதவ கைகொடுக்க தொடங்கப்பட்ட திட்டமாகும்.

8. செல்வ மகள் சேமிப்பு கணக்கை மாற்ற முடியுமா?

பதில் : முடியும். போஸ்ட் ஆபீஸில் தொடங்கப்பட்ட கணக்கை வங்கிக்கும், வங்கியில் தொடங்கப்ப்ட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்கை போஸ்ட் ஆபீஸூக்கும் மாற்றலாம்.

9. செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் முதலீடு விவரம்?

பதில்: ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்

10. எத்தனை கணக்குகள் தொடங்க முடியும்?

பதில் : ஒரு பெண் குழந்தை பெயரில் ஒரு திட்டம் மட்டுமே தொடங்க முடியும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் இருவரின் பெயரிலும் தனித்தனியாக 2 கணக்குகள் தொடங்கலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Post Office, Savings