மக்களிடையே நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வரி சலுகைகளோடு கூடிய பல அஞ்சல் துறைத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவை முதலீட்டாளர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையிலான சேமிப்பு திட்டங்களாக இருகின்றன. இந்திய அஞ்சல் துறை எளிய பல பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களை மக்களுக்கு வழங்குகிறது. இவற்றிலிருந்து நீங்கள் உங்களது முதலீட்டு நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். 1961-ன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் படி, இந்த முதலீட்டு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு வரி சலுகைகளையும் வழங்குகின்றன. பிரிவு 80C நன்மைகளுடன் வரும் 5 அஞ்சல் அலுவலக திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மெச்சூரிட்டியின் போது இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் சேர்த்து நிதி பலன்களை தருகிறது. PPF திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தற்போதைய வருடாந்திர வட்டி விகிதம் (compound interest rate) 7.1% ஆகும். கூடுதலாக இந்த திட்டம் மூன்று மடங்கு வரி சலுகையை வழங்குகிறது. IT சட்டத்தின் 80C பிரிவுக்கு இணங்க இந்த திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக ஒரு வருடத்தில் PPF-ல் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.1.5 லட்சம் ஆகும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): இந்த திட்டத்திற்கான அஞ்சல் கணக்கை 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தையின் பெயரில் திறக்கலாம். குறிப்பிட்ட பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பியவுடன் அக்கவுண்டின் உரிமையை பெறுவார். இந்த திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் வட்டி விகிதம் 7.6% ஆகும். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ.250, மற்றும் ஒவ்வொரு நிதியாண்டும் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டக் கணக்கில் செலுத்தப்படும் எந்த தொகைக்கும், ஐடி சட்டம், 1961-ன் 80C-யின் கீழ் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS): 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களை இலக்காக கொண்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது 5 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட்டுடன் வருகிறது. இந்த திட்டம் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் / அதிகபட்சம் முதலீட்டு வரம்புகள் முறையே ரூ.1,000 மற்றும் ரூ.15 லட்சம் ஆகும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தற்போது கணக்கு இருப்பு பணத்திற்கு ஆண்டுக்கு 8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. SCSS-ல் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80C-ன் கீழ் வருமான வரி விலக்கு நன்மைகளுக்குத் தகுதியுடையவை. எனவே இந்த திட்டத்தில் செய்யும் முதலீடுகளுக்கு மூத்த குடிமக்கள் வரி விலக்கு கோரலாம். ஆனால் பிரிவு 80C-ன் கீழ் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்திற்கு மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.
போஸ்ட் ஆஃபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (TD): இந்திய அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் என்பதன் மற்றொரு பெயர் தான் போஸ்ட் ஆஃபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் ஆகும். இவை பல மெச்சூரிட்டி பீரியட்களை கொண்டுள்ளன மற்றும் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட்டை போலவே உள்ளன. குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1000, அதிகப்பட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. கணக்கு வைத்திருப்பவரின் சேமிப்புக் கணக்கில் வருடாந்திர வட்டியானது வரவு வைக்கப்படும். 5 ஆண்டுகள் டைம் டெபாசிட் திட்டத்திற்கு மட்டுமே 1961 வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட காலாண்டு வட்டி விகிதத்தின்படி இந்த 5 வருட டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 7% ஆகும்.
நேஷ்னல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்ஸ் (NSC): இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1,000-ஆக இருக்கும் நேரத்தில் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. டெபாசிட் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அக்கவுண்ட் மெச்சூரிட்டி அடையும். 1961 வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ், NSC திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் ரூ.1.50 லட்சம் வரையிலான வரி சலுகைகளுக்குத் தகுதியுடையவை. கூடுதலாக வரி காரணங்களுக்காக, NSC சொத்துக்களில் பெறப்படும் வருடாந்திர வட்டி ஒரு புதிய முதலீடாக கருதப்படுகிறது. NSC-ல் முதலீட்டிற்கு TDS செலுத்த தேவையில்லை, ஆனால் கிடைக்கும் வட்டிக்கு செலுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accounts, Income tax, Post Office, Savings