Home /News /business /

இரண்டாவது வருமானத்திற்கு சிறந்த துறை ரியல் எஸ்டேட்! ஏன் தெரியுமா?

இரண்டாவது வருமானத்திற்கு சிறந்த துறை ரியல் எஸ்டேட்! ஏன் தெரியுமா?

இரண்டாவது வருமானம்

இரண்டாவது வருமானம்

வெறும் ரூ. 25 லட்சம் இருந்தாலே போதும். ரியல் எஸ்டேட் துறையில் களமிறங்கலாம்.

  கொரோனா லாக்டவுனுக்கு முன்பிருந்ததை விடவும், தற்போது பொருளாதார சூழ்நிலை மோசமாக மாறிவருகிறது. இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் வருமானத்தை வைத்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். எனவே தான் தற்போது கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. என்ன தான் கையில் ஒருவேலை இருந்தாலும் அது நிகழ்கால தேவையை சமாளிக்க மட்டுமே உதவுகிறது, எதிர்கால தேவைகளை சமாளிக்கவோ, சேமிக்கவோ போதுமான வருமானம் கிடைப்பதில்லை.

  எனவே தான் இரண்டாவது வருமானம் என்பது அவசியமாகிறது. கொரோனா, ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற அடுத்தடுத்த பிரச்னைகளால் இனி இரண்டாவது வேலையை விருப்பாக இல்லாமல், கட்டாயமாக செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவர் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தாலும், செலவுகள் அதிகரிப்பு மற்றும் சேமிப்புகள் குறைவதால் கடன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  வங்கி அல்லாத பாரத் பில் பேமெண்ட் யூனிட்களுக்கான நிகர மதிப்பு தேவையை குறைப்பதாக ஆர்பிஐ அறிவிப்பு!

  இரண்டாவது வருமானம் முக்கியமானது என்பதற்கான சில முக்கிய காரணங்கள் கீழே உள்ளன;

  அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் பணவீக்கத்தைத் குறைத்தல்:

  பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தாலும், வருமானம் என்னவோ அதே அளவில் தான் உள்ளது. பணவீக்க விகிதத்தில் வருடாந்திர அதிகரிப்பு காரணமாக நிலையான வைப்புத்தொகைகள் (FD) போன்ற பாரம்பரிய முதலீட்டு வழிமுறைகள் கைகொடுக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

  அவசர தேவைகளை சமாளிக்க:

  வேலை இழப்பு, திடீர் மருத்துவச் செலவு, மற்றும் உடல் நலக்குறைப்பாடு போன்ற நிதி அவசரநிலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பலரது நிதி நிலையையும் பதம் பார்த்துள்ளது. இத்தகைய திடீர் நிதி நெருக்கடியான சூழ்நிலைகளில், பங்குச் சந்தை அல்லது பரஸ்பர நிதிகள் எப்போதும் போதுமான பணத்தேவைக்கு உதவாது. சிலர் தங்களுடைய வருங்கால வைப்பு நிதி அல்லது நிலையான வைப்புத்தொகையை கூட கட்டமுடியாமல் சிரமப்படலாம்.

  ரூ.35 லட்சம் வரை பர்சனல் லோன்... எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!

  ஆர்வங்களை சமாளிக்க:

  கார் வாங்குவது, திறமையான படிப்பில் சேர்வது, கனவு விடுமுறையை கழிப்பது, ஆர்வமான விஷயங்களை செய்வது போன்ற இலக்குகள் இரண்டாவது வருமானத்தால் செய்து கொள்ளலாம்.

  ஓய்வுக்கால திட்டம்:

  தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஓய்வூதியம் என்பது கிடையாது. எனவே நிலையான ஓய்வூதிய திட்டத்தை உருவாக்குவதற்கு இரண்டாவது வருமானம் கைகொடுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  இரண்டாவது வருமான ஆதாரத்தைப் பற்றி நினைக்கும் போது, ​​ஒருவர் பங்குச் சொத்துக்களிலிருந்து பெறப்பட்ட ஈவுத்தொகை அல்லது குடியிருப்புச் சொத்திலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தைப் பற்றி மட்டுமே நினைக்கின்றனர். ஆனால், நிலையற்ற சந்தை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அதிக ஸ்திரத்தன்மையை வழங்கும் ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்களில் ஆய்வு செய்து கவனம் செலுத்தலாம்.

  கமர்ஷியல் ரியல் எஸ்டேட்டில் (CRE) முதலீடு செய்வதற்கு மிகவும் ஏற்றது, இதன் விலை நூற்றுக்கணக்கான கோடிகளாக இருக்கும், ஆனால் ஒவ்வொரு முதலீட்டாளரிடமிருந்தும் வெறும் ரூ. 25 லட்சம் இருந்தாலே போதும். ரியல் எஸ்டேட் துறையில் களமிறங்கலாம். ரூ.25 லட்சம் முதலீட்டில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Business, Savings

  அடுத்த செய்தி