Home /News /business /

கோவிட் 2-வது அலையால் வேளாண் துறையில் எந்த வகையிலும் பாதிப்பில்லை - நிதி ஆயோக் தகவல்!

கோவிட் 2-வது அலையால் வேளாண் துறையில் எந்த வகையிலும் பாதிப்பில்லை - நிதி ஆயோக் தகவல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

அரிசி, கோதுமை மற்றும் கரும்புக்கு ஆதரவாக மானியம், விலை மற்றும் தொழில்நுட்பம் குறித்த இந்தியாவின் கொள்கைகள் இருக்கின்றன.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் முதுகெலும்பான விவசாய துறை எந்த வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நிதி ஆயோக் கூறி உள்ளது. நகர் பகுதிகளை போல கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவி உள்ள சூழலில் நிதி ஆயோக்கின் வேளான் பிரிவு உறுப்பினரான ரமேஷ் சந்த் இத்தகவலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு: அரிசி, கோதுமை மற்றும் கரும்புக்கு ஆதரவாக மானியம், விலை மற்றும் தொழில்நுட்பம் குறித்த இந்தியாவின் கொள்கைகள் இருக்கின்றன.

இது போல் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கையை பருப்பு வகைகளுக்கு சாதகமாக்க வேண்டும். ஏனென்றால் சமையல் எண்ணையை போல பருப்புகளை இறக்குமதி செய்ய முடியாது. சர்வதேச சந்தையில் குறைவான அளவே பருப்பு வகைகளே உள்ளன. 2020-21-ஆம் நிதியாண்டில் வேளாண் துறையின் வளா்ச்சி 3% அதிகமாக இருக்கும் என்றாா். கொரோனா இரண்டாம் அலையை பொறுத்த வரை, கிராமப்புறங்களில் மே மாதத்தில் தான் பரவத் தொடங்கியது. பொதுவாக கிராமங்களில் மே மாதத்தில் விவசாய நடவடிக்கைகள் மிக குறைவு, குறிப்பாக "நில அடிப்படையிலான நடவடிக்கைகள்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாட்டில் வெயில் உச்சகட்டமாக இருக்கும் மாதமான மே மாதத்தில் சிறிதளவு காய்கறிகள் மற்றும் சில பருவகால பயிர்களைத் தவிர வேறு பெரிய பயிர்கள் அறுவடை செய்யப்படுவதில்லை. எனவே பெரும்பாலும் விவசாய நடவடிக்கைகள், மார்ச் அல்லது ஏப்ரல் நடுப்பகுதி வரை உச்சமாக இருந்து அதன் பிறகு இது கணிசமாக குறைந்து, மீண்டும் பருவ மழைக்காலத்தின் போது உச்சத்தை அடைகிறது. எனவே மே மற்றும் ஜூன் நடுப்பகுதி வரை குறைவான விவசாய உழைப்பு கிடைத்தாலும், அது விவசாயத்தை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று சந்த் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் நகர்ப்புறங்களில் வைரஸ் தொற்று பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு படையெடுத்துள்ளனர். இவர்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத் துறையில் பணியாற்ற தயாராக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயத்திற்கான சந்தை எல்லா இடங்களிலும் இயல்பாக வேலை செய்கிறது.

Also read... SBI, HDFC, ICICI வங்கிகளில் ஜூன் மாதத்தோடு முடிவடையுள்ள ஸ்பெஷல் FD திட்டங்கள்.. முதலீடு செய்ய கடைசி வாய்ப்பு!

இதன் காரணமாக கிராமப்புற மக்களுக்கு சம்பாதிப்பதற்கான முக்கிய ஆதாரமாக இருக்கும் விவசாயத் துறையின் வருமானம் வீழிச்சி அடையாமல் அப்படியே தான் உள்ளது. பருப்பு வகைகள் உற்பத்தியில் இந்தியா ஏன் தன்னிறைவு பெறவில்லை என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், நீர்ப்பாசனத்தின் கீழ் பருப்பு வகைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இது உற்பத்தியில் நிறைய வித்தியாசத்தையும் விலைகளில் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் என்றார்.

கடந்த நிதியாண்டில் பண்ணைத் துறை 3.6 சதவீதமாக வளர்ந்ததாகவும் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தொற்று நாட்டைத் தாக்கும் முன்பு, நான்காம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் அதிகரித்த பின்னர், 2021 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் எதிர்பார்த்ததை விட 7.3% குறைவாக நமது நாட்டின் பொருளாதாரம் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Agriculture, Covid-19, Niti Aayog

அடுத்த செய்தி