ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் என்பது நாட்டின் தொழில்முனைவோருக்கு மலிவான வணிக நிதியை வழங்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆகும். இந்த திட்டம் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களில் இருந்து பெண் தொழில்முனைவோர் மற்றும் தொழில்முனைவோருக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மானியம் பெற்ற கடன் தொகைகளை வழங்குகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா (Startup India) திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்குவது, ஸ்டார்ட் அப் தொடங்குவதை எளிமையாக்குவது, வரி சலுகைகள் வழங்குவது உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 2016 இல் 452 இல் இருந்து 2022 இல் 84,012 ஆக உயர்ந்துள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ், ஒரு ஸ்டார்ட்அப்பின் வணிக சுழற்சியின் பல்வேறு கட்டங்களில் மூலதனத்தை வழங்குவதற்காக, ஸ்டார்ட்அப்களுக்கான நிதி (FFS) மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் (SISFS) ஆகியவற்றை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் பான்-இந்தியா அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன.
ஸ்டார்ட்அப்களுக்கான நிதி (FFS) திட்டம் : ஸ்டார்ட்அப்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் FFS என்ற திட்டத்தை நிறுவியுள்ளது. டிபிஐஐடி கண்காணிப்பு நிறுவனம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDPI) என்பது FFS-ன் இயக்க முகமையாகும்.
ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் (SISFS) : இத்திட்டத்தின் நோக்கம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தொழில் மேம்பாடு, தயாரிப்பு, சந்தை நுழைவு மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றுக்கான நிதி உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடக்கங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSS): CGSS ஆனது தகுதியுள்ள கடன் வாங்குபவர்களுக்கு நிதியளிப்பதற்காக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மூலம் DPIIT -யால் அங்கீகரிக்கப்பட்ட கடன் உத்தரவாத திட்டமாகும்.
அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM):
அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM) என்பது 2016 ஆம் ஆண்டு நிதி (NITI) ஆயோக் மூலம், புதிய தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு முதன்மை முயற்சியாகும். நாடு முழுவதும் பள்ளி, பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்கள், MSME மற்றும் தொழில்துறை மட்டங்களில் புதிய தொழில்முனைவோரின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதும் மேம்படுத்துவதும் AlM -ன் நோக்கங்களாகும்.
பிற திட்டங்கள்:
ஸ்டாண்ட்-அப் இந்தியா: எஸ்சி/எஸ்டி மற்றும்/அல்லது பெண் தொழில்முனைவோருக்கு நிதியளிப்பதற்காக
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா
சுய வேலைவாய்ப்பு கடன் திட்டங்கள்- கடன் வரி - 1 - மைக்ரோ ஃபைனான்சிங் திட்டம்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சர்வதேச காப்புரிமைப் பாதுகாப்பிற்கான ஆதரவு (SIP-EIT).
ஆஸ்பயர் - புதிய கிராமப்புற தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்புக்கான திட்டம்.
மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தவிர, பல்வேறு துறைகள் மற்றும் தொழில்முனைவோரின் தேவைகளுக்கு குறிப்பிட்ட பல திட்டங்கள் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Technology, Viral