• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரிசர்வ் வங்கி உத்தரவை தள்ளிவைத்த உச்சநீதிமன்றம்- இந்தியாவுக்குள் டிஜிட்டல் கரன்ஸிக்கு அனுமதி!

ரிசர்வ் வங்கி உத்தரவை தள்ளிவைத்த உச்சநீதிமன்றம்- இந்தியாவுக்குள் டிஜிட்டல் கரன்ஸிக்கு அனுமதி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

க்ரிப்டோகரன்ஸி நடைமுறைகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி முற்றிலுமாக தடை விதித்திருந்தது.

  • Share this:
    இந்தியாவினுள் டிஜிட்டல்கரன்ஸி என்றழைக்கப்படும் க்ரிப்டோகரன்ஸி (CryptoCurrency) நடைமுறைகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி முற்றிலுமாக தடை விதித்திருந்தது.

    ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவை தள்ளிவைத்துவிட்டு இந்தியாவினுள் க்ரிப்டோகரன்ஸி நுழைய அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம். க்ரிப்டோகரன்ஸி முறையை இந்தியாவினுள் முற்றிலுமாகத் தடை செய்யாமல் அதற்கான ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி அனுமதிக்கலாமே என உச்ச நீதிமன்றம் ஆலோசனையும் வழங்கியுள்ளது.

    இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, ”க்ரிப்டோகரன்ஸிக்கு ரிசர்வ் வங்கி நேரடியாக எவ்வித தடையையும் விதிக்கவில்லை. புகழ் மற்றும் நிதி சார்ந்த அபாயங்களைத் தர வல்ல நடவடிக்கைகளுக்கு மட்டுமே தடை என உத்தரவு பிறப்பித்துள்ளோம். இது தீவிரவாதத்துக்கான நிதி மற்றும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவும் அபாயம் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் பார்க்க: க்ரெடிட் கார்டு துறையில் கால்பதிக்கும் ஜொமேட்டோ... ஆர்.பி.எல் வங்கியுடன் புதிய கூட்டணி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: