Home /News /business /

SBI : வீட்டில் இருந்தபடியே எஸ்பிஐ வங்கி சேவைகளை பெறலாம்.. எப்படி தெரியுமா?

SBI : வீட்டில் இருந்தபடியே எஸ்பிஐ வங்கி சேவைகளை பெறலாம்.. எப்படி தெரியுமா?

எஸ்பிஐ

எஸ்பிஐ

SBI WhatsApp service : வங்கி தொடர்பான வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), இந்தியாவில் WhatsApp வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

    எஸ்பிஐயின் வாட்ஸ்அப் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், வங்கியாளர்கள் வாட்ஸ்அப் வங்கிச் சேவையைப் பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட், கடந்த ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மூத்த குடிமக்கள் உட்பட வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி வங்கிச் சேவைகளை பெற , வங்கி தொடர்பான வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சூப்பரான வசதியை நீங்களும் பெற கீழ்க்கண்ட படிகளை ஃபாலோ செய்யுங்கள்.

    பெற்றோர்கள் கவனத்திற்கு.. போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளுக்காகவே செயல்படும் திட்டங்கள் பற்றி தெரியுமா?

    எஸ்பிஐயின் வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். சேவையைப் பெற முயற்சிக்கும் பதிவு செய்யப்படாத வாடிக்கையாளர் பதிவு செய்ய வங்கியிலிருந்து ஒரு செய்தியைப் பெறுவார். அதில் “நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளில் பதிவு செய்யப்படவில்லை. இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு பின்வரும் SMS WAREG A/c எண்ணை 917208933148 என்ற எண்ணுக்கு உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அனுப்பவும். இந்தச் சேவைகளுக்கான விரிவான விவரங்களை நீங்கள் bank.sbi இல் பார்க்கலாம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

    SBI WhatsApp service, SBI account, SBI online, SBI bank, SBI service, SBI numver, SBI branch, SBI atm, v near mne, SBI state bank of india, sbi online, SBI mobile banking, SBI net banking, state bank of india check account balance a, WhatsApp sbi, எஸ்பிஐ, எஸ்பிஐ பேங்க், எஸ்பிஐஆன்லைன், எஸ்பிஐ அக்கவுட், எஸ்பிஐ மொபைல் பேகிங், எஸ்பிஐ ஆன்லைன் பேம்ங்கி, எஸ்பிஐ நெட் பேக்கிங், எஸ்பிஐ பேலன்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ

    எனவே எஸ்பிஐ வாட்ஸ்அப் சேவை பயன்படுத்த முதலில் பதிவு செய்ய வேண்டும். எஸ்பிஐ வாட்ஸ்அப் சேவையில் பதிவு செய்வதற்கான வழி, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து WAREG A/C எண்ணை (9172089XXX) SMS அனுப்பவும். உங்கள் பதிவு முடிந்ததும், நீங்கள் SBI இன் WhatsApp வங்கி சேவையைப் பயன்படுத்தலாம்.

    WhatsApp வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறை:

    படி 1: பதிவுசெய்ததும், +919022690226 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என்று அனுப்பவும் அல்லது வாட்ஸ்அப்பில்  ‘அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் வெற்றிகரமாக எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைக்காகப் பதிவு செய்துள்ளீர்கள்’ என்று வரும் மெசேஜூக்கு  பதிலளிக்கவும்.

    பேங்கில் அக்கவுண்ட் தொடங்க இனி ஆதார், பான் அவசியமில்லை.. வரப்போகிறது CKYC முறை!

    படி 2: பதிலளித்தவுடன், இந்த பதிலைப் பெறுவீர்கள், ‘அன்புள்ள வாடிக்கையாளரே, SBI Whatsapp வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்!

    இந்த படிகள் முடிந்தவுடன் நீங்கள் கணக்கு இருப்பு தொகை, சிறு அறிக்கை ஆகியவற்றை வாட்ஸ் அப் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: SBI, State Bank of India

    அடுத்த செய்தி