வாடிக்கையாளர்களை மோசடியாளர்கள் ஏமாற்றுவதைத் தவிர்க்கும் வகையில், எஸ்பிஐ அவ்வபோது அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது. தொழில்நுட்பங்கள் பல பெருகியுள்ள நிலையில், பல்வேறு தளங்கள் மூலமாக மோசடியாளர்கள் ஊடுருவி வாடிக்கையாளர்களின் தகவல்களையும், பணத்தையும் திருடி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் வாடிக்கையாளருக்கான அறிவுரை விதிமுறைகளில் எஸ்பிஐ வங்கி திருத்தம் செய்துள்ளது. மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களை என்னென்ன வழிகளில் ஏமாற்ற கூடும் என்று எஸ்பிஐ பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்களின் வங்கி அக்கவுண்ட் விவரங்களை அப்டேட் செய்ய வலியுறுத்தி வரும் டெக்ஸ்ட் மெசேஜஸ் குறித்து எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக மோசடியாளர்கள் அனுப்பும் மெசேஜ்களில் ஒன்றை எஸ்பிஐ சுட்டிக்காட்டியுள்ளது. மோசடியாளர்கள் அனுப்பும் மெசேஜில், “அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் எஸ்பிஐ வங்கி அக்கவுண்ட் ஆவணங்கள் காலாவதியாகிவிட்டன. உங்கள் அக்கவுண்ட் 24 மணி நேரத்தில் பிளாக் செய்யப்படும். இந்த லிங்க் கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யுங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “எஸ்எம்எஸ் வாயிலாக கேஒய்சி விவரங்களை அப்டேட் / நிறைவு செய்யுமாறு எஸ்பிஐ உங்களை ஒருபோதும் கேட்டுக் கொள்ளாது. பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியாளர்கள் அனுப்பும் மெசேஜ் குறித்த உதாரணம் ஒன்றை டிவிட்டரில் எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. அதனுடன், #YehWrongNumberHai, #SafeWithSBI மற்றும் #AmritMahotsav என்ற கேஷ்டேக்குகளை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “#YehWrongNumberHai என்பதைப் போல, கேஒய்சி மோசடி எப்படி நடக்கும் என்பதற்கான உதாரணம் இது. இந்த எஸ்எம்எஸ் மோசடியை ஏற்படுத்தும். உங்கள் சேமிப்பு பணத்தை நீங்கள் இழக்க நேரிடும். இதுபோன்ற எம்பெட்டட் லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள். எஸ்எம்எஸ் வரும்போது SB என்ற மிகச் சரியான குறுகிய கோட் இருக்கிறதா என்பதை சரி பாருங்கள். பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Here is an example of #YehWrongNumberHai, KYC fraud. Such SMS can lead to a fraud, and you can lose your savings. Do not click on embedded links. Check for the correct short code of SBI on receiving an SMS. Stay alert and stay #SafeWithSBI.#SBI #AmritMahotsav pic.twitter.com/z1goSyhGXq
— State Bank of India (@TheOfficialSBI) March 4, 2022
மோசடியாளர்கள் டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக அனுப்பி லிங்க் என்பது எஸ்பிஐ வங்கி அனுப்புவதைப் போலவே இருக்கும். அதில் உள்ள லிங்க்களை கிளிக் செய்யும்போது வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட் விவரங்களை மோசடியாளர்கள் பெற்று விடுவார்கள். இதன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் தொகையை அவர்கள் டிரான்ஸாக்ஷன் செய்து கொள்கின்றனர்.
ALSO READ | நடைமுறையில் உள்ள 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை 8 விழுக்காடாக உயர்த்த முடிவு?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.