Home /News /business /

இனி ஜாக்கிரதையா இருங்க.. QR Code ஸ்கேனிங் குறித்து எஸ்பிஐ எச்சரிக்கை! 

இனி ஜாக்கிரதையா இருங்க.. QR Code ஸ்கேனிங் குறித்து எஸ்பிஐ எச்சரிக்கை! 

காட்சி படம்

காட்சி படம்

சமீபகாலமாக QR Code ஸ்கேன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வதில் மோசடிகள் நடப்பதாக அதிக அளவில் புகார்கள் எழுந்துள்ளன.

ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக வங்கிகள் தங்களது பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டு வர, வர, மோசடிக்காரர்களும் புதுப்புது டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி புதிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது.

ஆன்லைன் பேமெண்ட் அல்லது மொபைல் பேமெண்ட்டுகளை செலுத்தும் போது சில ஆபத்துக்கள் இருக்கின்றன. இத்தகைய கட்டண முறைகள் டிஜிட்டல் இந்தியாவின் நோக்கத்தை நிறைவேற்றும் அதே வேளையில், மறுபுறம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணத்தை இழக்கும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.

சமீபகாலமாக QR Code ஸ்கேன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வதில் மோசடிகள் நடப்பதாக அதிக அளவில் புகார்கள் எழுந்துள்ளன. ஆன்லைனில் QR Code ஸ்கேனிங் மூலமாக பணம் செலுத்துவதாக கூறி ஹேக்கர்கள் வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்களில் உள்ள பணத்தை திருடுவதாகவும், கடை வாசல்களில் உள்ள ஒரிஜினல் QR Codeக்கு மேல் போலி QR Code-யை ஒட்டிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

also read : இந்த தேதிகளில் வங்கிச் சேவை பாதிக்கப்படலாம்.. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க!

இந்நிலையில், QR Code ஸ்கேன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர்களுக்கு பாரத் ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது QR Code ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என தனது வாடிக்கையாளர்களை எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பாரத் ஸ்டேட் பேங்க் தனது ட்விட்டர் பக்கத்தில், SBI "QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணத்தைப் பெறுவீர்களா? #YehWrongNumberHai. QR குறியீடு மோசடி குறித்து ஜாக்கிரதை! ஸ்கேன் செய்வதற்கு முன் யோசியுங்கள், தெரியாத, சரிபார்க்கப்படாத QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் #SafeWithSBI உடன் இருங்கள்!" என எச்சரிக்கை விடுத்துள்ளது.

also read : ஏப்ரல் மாத வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் ? முழு விவரம் இதோ..
 QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் நடைமுறை தற்போது டீ கடையில் தொடங்கி பிரம்மாண்ட மால்கள் வரை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஒருவருக்கு பணம் செலுத்தவோ அல்லது ஒருவரிடமிருந்து பணம் பெறவோ QR CODE ஸ்கேனிங் முறை வசதியானதாக உள்ளது.இந்த வசதியை மோசடி பேர்வழிகள் தவறாகவும் பயன்படுத்தக்கூடும் என்பதால், பணம் பெறுவதற்காக QR குறியீட்டை ஸ்கேன் செய்ய மெசேஜ் அல்லது மெயில் வந்தால், அத்தகைய மோசடியைத் தொடர வேண்டாம் என்றும், இதனால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

QR குறியீடுகள் இரு பரிமாண இயந்திரம் படிக்கக்கூடிய பார்கோடுகளாகும், இவை விற்பனை புள்ளியில் மொபைல் கட்டணங்களை எளிதாக்குவதற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

QR குறியீடுகள் அதிக அளவு தகவல்களைச் சேமிக்கும். ஜப்பானிய நிறுவனமான டென்சோ வேவ், 1990 களில் QR குறியீட்டைக் கண்டுபிடித்தது. இந்தியாவில், QR குறியீடு கட்டண முறைமைகள் மூன்று வெவ்வேறு வகையான QR குறியீடு கட்டணங்களை ஆதரிக்கின்றன -- Bharat QR, UPI QR மற்றும் Proprietary QR ஆகும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: SBI, SBI Bank

அடுத்த செய்தி