• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • SBI : பென்ஷன் வாங்குபவர்கள் இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! வந்தாச்சு சூப்பர் அப்டேட்

SBI : பென்ஷன் வாங்குபவர்கள் இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! வந்தாச்சு சூப்பர் அப்டேட்

எஸ்பிஐ பென்ஷன்

எஸ்பிஐ பென்ஷன்

எஸ்பிஐ மற்றொரு சூப்பர் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளது.

  • Share this:
    எஸ்பிஐ வங்கியில் பென்ஷன் பெறுபவர்கள் கவனத்திற்கு. நீங்கள் இனிமேல் பென்ஷன் பெறுவதற்கு முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ.

    நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) இப்போது உங்கள் ஓய்வை மகிழ்ச்சியாக மாற்றுவதற்காக ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. எப்போதுமே ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால், அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் அந்தந்த வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், எஸ்பிஐ ஓய்வூதிய கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமன் பத்ராவை எந்தவொரு வங்கி கிளைகளிலோ அல்லது ஆன்லைனிலோ டிசம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

    அதை தவிர எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ‘எஸ்பிஐ பென்சன் சேவா’ என்ற பிரத்யேக இணையதளத்தை செயல்பாட்டில் வைத்துள்ளது. இதில், பென்சன்தாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும்.பொது ஓய்வூதியதாரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் நோக்கத்தில் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டது. எஸ்பிஐ ஓய்வூதிய சேவை வலைத்தளத்தில் எஸ்பிஐ ஓய்வூதியம் பெறுவோர் உள்நுழைந்து அவர்களின் ஓய்வூதிய தொடர்பான விவரங்களை உடனடியாக சரிபார்த்துக்கொள்ளலாம். தற்போது வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ மற்றொரு சூப்பர் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளது.

    பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, முதியோர்களின் சிரமத்தை புரிந்துகொண்டு,பென்ஷன் வாங்குபவர்கள் ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந்தப்படியே வீடியோ கால் மூலமாக சமர்ப்பித்துவிடலாம். இனிமேல், இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என கூறியுள்ளது.அதற்கு முதலில் https://www.pensionseva.sbi/ என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.

    நம்பி முதலீடு செய்தால் ரூ. 35 லட்சம் ரிட்டன்.. போஸ்ட் ஆபீஸில் இப்படியொரு சிறுசேமிப்பு திட்டமா?

    பின்பு, ‘Video LC’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் SBI பென்சன் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.அந்த கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை, பதவிட வேண்டும். அங்கு தோன்றும் ‘Start Journey’ என்பதைக் கிளிக் செய்துவிட்டு, பான் கார்டை கையில் வைத்துகொண்டு, ‘I am ready’ கிளிக் செய்துவிட்டு, வீடியோ அழைப்பைத் தொடங்க அனுமதி கொடுக்க வேண்டும்.SBI அதிகாரி இணைந்தவுடன் உங்கள் வீடியோ அழைப்பு தொடங்கிவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: